Advertisement
சைவம்

சுட சுட சோறுடன் பிசைந்து சாப்பிட ருசியான சுண்டைக்காய் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

தென்னிந்திய உணவுகளில் செய்யப்படும் குழம்பிலேயே சுண்டைக்காய் வத்தல் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இந்த குழம்பை மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து, அப்பளம், பொரியல் என்று வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. சுண்டைக்காய் சுவை நம்மில் பலருக்குப் பிடிக்காது. அதிலும் குழந்தைகள் சுண்டக்காய் என்றால் அலறி அடித்துக் கொண்டு தான் ஓடுவார்கள். ஆனால் இந்த முறையில் சுண்டக்கா குழம்பை வைக்கும் போது கொஞ்சம் கூட அதன் கசப்புத் தன்மை தெரியாமல், சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இந்த சுண்டைக்காயில் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது. மருந்துகள் பொதுவாக கசப்புச் சுவை நிறைந்ததாக இருக்கும். கல்யாணவீடுகளிலும், உணவகங்களிலும் தயாரிக்கப்படுகின்ற சுண்டைக்காய் வற்றல் வத்தக்குழம்புக்கென்றெ பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிக ஊட்டசத்துக்கள் கொண்ட சுண்டைக்காயை எதாவது ஒருவகையில் வாரமிருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

Advertisement

சுண்டை, மலைச்சுண்டை, பேயத்தி, கடுகி, அமரக்காய் என்றபெயர்களிலும் குறிப்பிடப்படுகிறது. சுண்டைக்காயும் கூட கசப்பாகதான் இருக்கும். ஆனால், வயிற்றுப்பூச்சிகளை கொல்வதில் இருந்து மூலநோயைக் குணப்படுத்துவது, ஹீமோகுளோபினை அதிகரிப்பது என பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. இதில் சுவையான குழம்பு வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

சுண்டைக்காய் தொக்கு | sundakkai thokku recipe in tamil

Print Recipe
தென்னிந்திய உணவுகளில் செய்யப்படும் குழம்பிலேயே சுண்டைக்காய் வத்தல் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இந்த குழம்பை மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து, அப்பளம், பொரியல் என்று வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. சுண்டைக்காய்
Advertisement
சுவை நம்மில் பலருக்குப் பிடிக்காது. அதிலும் குழந்தைகள் சுண்டக்காய் என்றால் அலறி அடித்துக் கொண்டு தான் ஓடுவார்கள். ஆனால் இந்த முறையில் சுண்டக்கா குழம்பை வைக்கும் போது கொஞ்சம் கூட அதன் கசப்புத் தன்மை தெரியாமல், சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதில் சுவையான குழம்பு வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
Course dinner, LUNCH
Cuisine Indian
Keyword sundakkai thokku
Advertisement
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 272

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் சுண்டைக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் நல்லெண்ணெய்
  • 2 தக்காளி
  • புளி எலுமிச்சை அளவு
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • முதலில் சுண்டைக்காயை கழுவி, கொஞ்சம் தட்டிக் கொள்ளவும்.
  • தக்காளியை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அதன்பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் வேக விடவும்.
  • அதன்பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு, சுண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • சுண்டைக்காய் வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி எண்ணெய் பிரிய வேகவிடவும்.
  • பிறகு கடைசியில் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதித்து, பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான சுண்டைக்காய் தொக்கு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 272kcal | Protein: 7g | Fat: 22g | Saturated Fat: 0.2g | Sodium: 95mg | Potassium: 350mg | Fiber: 9g | Calcium: 4mg | Iron: 0.12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

4 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

4 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

4 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

6 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

7 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

7 மணி நேரங்கள் ago