வித்தியாசமான சுண்டல் தயிர் கறி இந்த சம்மருக்கு ஒரு தடவை எப்படி செஞ்சு பாருங்க!!

சுண்டல் தயிர் கறி கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கா. டேஸ்ட் வித்தியாசமா ரொம்ப சூப்பராவே இருக்கும். தயிர் குழம்பு மோர் குழம்பு இதெல்லாம் இந்த சம்மருக்கு நம்மளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு அப்படியே தயிர் ஊத்தி சாப்பிட பிடிக்கும் ஒரு சிலர் அந்த தயிரை தாளித்து ஊத்தி சாப்ப

By ·

சுண்டல் தயிர் கறி கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கா. டேஸ்ட் வித்தியாசமா ரொம்ப சூப்பராவே இருக்கும். தயிர் குழம்பு மோர் குழம்பு இதெல்லாம் இந்த சம்மருக்கு நம்மளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு அப்படியே தயிர் ஊத்தி சாப்பிட பிடிக்கும் ஒரு சிலர் அந்த தயிரை தாளித்து ஊத்தி சாப்பிடுவாங்க. ஆனா அந்த மாதிரி இல்லாம தயிர் குழம்பு மோர் குழம்பு வச்சா இன்னும் ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும். இந்த தயிர் குழம்பு மோர் குழம்புல கோவக்காய் வெண்டைக்காய் தண்ணீர் காய்கறிகளான சுரைக்காய் சௌசௌ காய் இதெல்லாம் சேர்த்து செய்வாங்க. ஆனா இப்ப கொஞ்சம் வித்தியாசமா கருப்பு சுண்டல் வச்சு ஒரு சூப்பரான தயிர் கறி ரெசிபி செய்ய போறோம்.

சாதம் இட்லி, தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான சைடிஷா இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இப்போ குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவ் விட போறாங்க அந்த சமயத்துல கண்டிப்பாக குழந்தைகள் ஏதாவது வித்தியாசமா செஞ்சு தர சொல்லி கேப்பாங்க. அப்படி கேக்குறவங்க குழந்தைகளுக்கு இந்த சம்மர் டைம்ல உடம்புக்கு எந்த வகையான பிரச்சனைகளும் வராமல் இருக்க தயிர் அடிக்கடி சேர்த்து ஏதாவது செஞ்சு கொடுங்க. பொதுவா குழந்தைகள் தயிர் வச்சு லஸ்ஸி கேப்பாங்க. அந்த மாதிரி செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஹெல்தியா கருப்பு சுண்டல் வச்சு ஒரு சூப்பரான கறி செஞ்சு கொடுங்க.

கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க இது செய்றதுக்கு நமக்கு ரொம்ப நேரம் தேவைப்படாது. ரொம்ப ரொம்ப குறைவான நேரம் தான் தேவைப்படும் வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வைத்து இதை செஞ்சுடலாம். இதுல நம்ம கஸ்தூரி மேத்தி சேர்க்க போறோம் ஆனா கஸ்தூரி மேத்தி இல்ல அப்படின்னா ஒன்னும் பிரச்சனை இல்ல அப்படியே விட்டுடுங்க இருக்கிற பொருட்களை வச்சே செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுவாங்க. சப்பாத்தி பூரிக்கு இந்த தயிர் கறி ரொம்ப ரொம்ப ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான சுண்டல் தயிர் கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான சௌசௌ மோர்க்குழம்பு ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full