டிபன் பாக்ஸில் கொடுத்து விட ருசியான சுரைக்காய் சாதம் இப்படி செஞ்சி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

உங்கள் வீட்டில் இன்று என்ன சமையல் செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியெனில் சுரைக்காயைக் கொண்டு சாதம் செய்யுங்கள். இந்த சுரைக்காய் சாதம் சாப்பிட அற்புதமாக இருக்கும். சுரைக்காய் 70 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து அதிகமுள

By Prem Kumar · 5/1/2024

உங்கள் வீட்டில் இன்று என்ன சமையல் செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியெனில் சுரைக்காயைக் கொண்டு சாதம் செய்யுங்கள். இந்த சுரைக்காய் சாதம் சாப்பிட அற்புதமாக இருக்கும். சுரைக்காய் 70 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து அதிகமுள்ள ஒரு காய் வகை. உடலை நீர்ச்சத்தடன் வைத்துக் கொள்வது தொடங்கி உடல் எடையைக் குறைப்பது வரையிலும் நிறைய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. ஆண்டுமுழுவதும் தடையற கிடைப்பவை. அதனால் இந்த சாதத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாகும். வழக்கமான சாதத்தைவிட இதுபோன்ற சாதத்தை செய்யும்போது நமது லஞ்ச் பாக்ஸ் சீக்கிரம் காலியாகிவிடும். இந்த சுரைக்காய் புரதம், வைட்டமின்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.

இதை வைத்து கூட்டு, பருப்பு கூட்டு, அல்வா, கீர் போன்ற இனிப்பு மற்றும் காரமான உணவு வகைகளை சுரைக்காய் கொண்டு செய்யலாம். இதனை தயிர் பச்சடி மற்றும் சட்னி வகைகளுடன் வைத்து சாப்பிடலாம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சுரைக்காய் சாதத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். இது ‌உருளைக்கிழங்கு வருவல், தயிர் பச்சடி, மற்றும் சிப்ஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும். உடல் எடையை குறைக்கவும் சுரைக்காய் பெரிதும் பயன்படுகிறது. அத்தகைய காயில் சுரைக்காய் சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் ருசியான நெய் சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

Recipes AMP · Quick view
View full