கேரளா ஸ்டைல் ருசியான நெய் சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

- Advertisement -

பொதுவாக நெய் சாதம் என்றால், சாதத்தில் நெய்யை ஊற்றி கிளறி கொடுப்போம். ஆனால் இந்த நெய் சாதத்திலேயே சில வகைகள் உள்ளன. அதுவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு மாறுபடும். மேலும் நெய் சாதம் ஒரு சிறந்த காலை உணவாகவும் இருக்கும். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும். இப்போது அந்த வகையில் கேரளா ஸ்டைலில் நெய் சாதம் எப்படி செய்வதென்று பார்க்கலாம். நெய் சாதம் என்று சொன்னாலே பிடிக்காது என்று யாருமே சொல்லமாட்டார்கள். பொதுவாக நெய் சாதம் என்றாலே எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள், அந்த வகையில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தை சாப்பிடுவதற்கு அடம் பிடித்தால் இந்த நெய் சாதத்தை செய்து கொடுத்தலே போதும், குழந்தைகள் அதிகமாவே விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

இந்த நெய் சாதம் சாப்பிடுவதற்கு மட்டுமின்றி குழந்தைகளின் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருவதற்கும் மிகவும் முக்கியமாக இருக்கிறது, எனவே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த நெய் சாதத்தை செய்து கொடுங்கள். அதிலும் கேரளா ஸ்டைல் நெய் சோறு என்றால் சொல்லவா வேணும். வேணும் வேணுன்னு அனைவரும் சாப்பிடுவார்கள். வளரும் குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவுகளை கொடுக்கவேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நெய்சாதம் ஊட்டச்சத்து மிக்கது. நெய் சோறு என்றாலே அது அளவுக்கு அதிகமாக நெய்யை ஊற்றி செய்யும் சோறு என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் அது அது கிடையாது.நெய்சோறு என்றால் நெய்யை அளவாக ஊற்றி சுவையாக இருக்கும்.

- Advertisement -

சிம்பிளான உணவாக இருந்தாலும் நல்ல சத்தான உணவாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கிற உணவாக இருக்க வேண்டும். இந்த வகையில் நெய் சாதத்தை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பதால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். தினமும் சாம்பார், காரக்குழம்பு என்று சமைக்காமல் ஒரு நாள் மாறாக நெய் சாதம் செய்து பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Print
2 from 1 vote

கேரளா ஸ்டைல் நெய் சாதம் | Ghee Rice Recipe In Tamil

பொதுவாக நெய் சாதம் என்றால், சாதத்தில் நெய்யை ஊற்றி கிளறி கொடுப்போம். ஆனால் இந்த நெய் சாதத்திலேயே சில வகைகள் உள்ளன. அதுவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு மாறுபடும். மேலும் நெய் சாதம் ஒரு சிறந்த காலை உணவாகவும் இருக்கும். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும். இப்போது அந்த வகையில் கேரளா ஸ்டைலில் நெய் சாதம் எப்படி செய்வதென்று பார்க்கலாம். நெய் சாதம் என்று சொன்னாலே பிடிக்காது என்று யாருமே சொல்லமாட்டார்கள். பொதுவாக நெய் சாதம் என்றாலே எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள், அந்த வகையில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தை சாப்பிடுவதற்கு அடம் பிடித்தால் இந்த நெய் சாதத்தை செய்து கொடுத்தலே போதும், குழந்தைகள் அதிகமாவே விரும்பி சாப்பிடுவார்கள், இந்த நெய் சாதம் சாப்பிடுவதற்கு மட்டுமின்றி குழந்தைகளின் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருவதற்கும் மிகவும் முக்கியமாக இருக்கிறது, எனவே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த நெய் சாதத்தை செய்து கொடுங்கள். அதிலும் கேரளா ஸ்டைல் நெய் சோறு என்றால் சொல்லவா வேணும். வேணும் வேணுன்னு அனைவரும் சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian, Kerala
Keyword: Kerala Ghee Rice
Yield: 4 People
Calories: 130kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கேரட்
  • 1 பெரிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • நெய் தேவையான அளவு
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • முந்திரி, திராட்சை தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை சிறிதளவு
  • 1 1/2 கப் பாசுமதி அரிசி
  • 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

செய்முறை

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கொத்தமல்லி இலை ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பாஸ்மதி அரிசி நன்றாக கழுவி 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • காய்கறிகள் சிறிது வதங்கியதும் ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்த்து நெய்யில் ஐந்து நிமிடம் மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும்.
  • பின் எலுமிச்சை சாறு சேர்த்து, அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து மூடி போட்டு மூன்று விசில் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் குக்கரை திறந்து மல்லி இலை சேர்த்து கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் கேரளா ஸ்டைல் சுவையான மற்றும் ஆரோக்கியமான நெய் சாதம் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 130kcal | Carbohydrates: 1.3g | Protein: 3.33g | Fat: 15g | Potassium: 15mg | Vitamin A: 72IU | Calcium: 9.3mg | Iron: 4mg

இதனையும் படியுங்கள் : வாயில் வைத்த உடன் கரையும் நெய் மைசூர் பாக் இப்படி செய்து பாருங்க!