விரும்பிய வேலை கிடைக்க செய்ய வேண்டிய சூரிய பகவான் வழிபாடு!
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நன்றாக வாழ்வதற்கு தேவை ஒரு நல்ல வேலை. நன்றாக உழைத்து வேலை செய்தால்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்த முடியும் முன்னேற்றம் காண முடியும். விரும்பிய வேலை அமையவில்லை என்றால் அதற்காக முயற்சிக்க வேண்டும் விரும்பிய வேலை கிடைப்பதற்காக சூரிய பகவானை வழிபட வேண்டும்
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நன்றாக வாழ்வதற்கு தேவை ஒரு நல்ல வேலை. நன்றாக உழைத்து வேலை செய்தால்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்த முடியும் முன்னேற்றம் காண முடியும். விரும்பிய வேலை அமையவில்லை என்றால் அதற்காக முயற்சிக்க வேண்டும் விரும்பிய வேலை கிடைப்பதற்காக சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய பகவானை வழிபட்டால் நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க வேலை தொழில் தனியார் வேலை என எந்த வேலையை நீங்கள் ஆசைப்பட்டாலும் அது கிடைப்பதற்கு சூரிய பகவானை தொடர்ந்து வழிபட வேண்டும் அப்பொழுது உங்களுக்கு விரும்பிய நல்ல வேலை கிடைக்கும் .சூரிய பகவானை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சூரிய பகவான்
காலையில் எழுந்ததும் சூரிய பகவானை பார்த்து சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்யும் போது நமக்கு ஒரு புதிய ஆற்றலும் அன்றைய நாள் சிறப்பாகவும் அமையும். சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே எழுந்து குளிக்க வேண்டும் அதுதான் சிறந்தது. சூரிய பகவானை காலையில் எழுந்து வணங்கும் போது நமக்கு ஒரு சுறுசுறுப்பு கிடைக்கும்.
விரும்பிய வேலை கிடைக்க சூரிய பகவான் வழிபாடு
காலை எழுந்து குளித்து முடித்ததும் சூரிய பகவானை பார்த்தபடி கையில் கடுகு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு சூரிய பகவானை நன்றாக வணங்கி கடுகு எண்ணெயை பூமியில் விட வேண்டும் ஓரிரு சொட்டுக்கள் விட்டால் போதும். பிறகு சூரிய பகவானை மனதார வேண்டிக்கொண்டு விரும்பிய வேலை கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள் மேலும் கடுகு எண்ணெயை பூமியில் விடும் போது சூரிய பகவான் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்
சூரிய பகவான் காயத்ரி மந்திரம்
இந்த குறிப்பிட்ட மந்திரத்தை கூறுவதன் மூலம் சூரிய பகவான் வழிபாடு மிகவும் சிறப்படையும்
மந்திரம்
ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே பாச
ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூரிய ப்ரசோதயாத்
ஞாயிற்றுக்கிழமையில் வீட்டிலேயே சூரிய பகவானை வேண்டிக் கொண்டு சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியமாக படைத்து சூரிய பகவான காயத்ரி மந்திரத்தை கூறி நன்றாக வேண்டி கொள்ளலாம் 40 நாட்கள் தொடர்ந்து சூரிய பகவானை இந்த முறையில் வழிபட்டு வந்தால் பிடித்த வேலை நிச்சயமாக கிடைக்கும். மனதிற்கு பிடித்த வேலை கிடைப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவான் இருக்கின்ற கோவிலுக்கு சென்று ஒரு தாமிர பாத்திரத்தில் கோதுமை சிவப்பு நிற வஸ்திரம் தாமரை பூ வைத்து சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். கோவிலுக்கு செல்லும் முன்பு சூரிய பகவானை வீட்டிலேயே நன்றாக வழிபட்டுவிட்டு செல்ல வேண்டும். இப்படி செய்யும் போது நிச்சயமாக சூரிய பகவானுடைய முழு அருளும் கிடைத்து நீங்கள் வேண்டியது கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்