Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை வாங்க வேண்டும் என்பதும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதும் தான். அந்த வகையில் போட்டிகள் நிறைந்த இந்த உலகில் வேலை வாய்ப்பு கிடைப்பதை மிகவும் சிரமமாக இருந்தாலும் அப்படியே வேலை கிடைத்தாலும் அந்த இடத்தில் உள்ள உயர் அதிகாரிகள் உடைய பல்வேறு தொல்லைகளால் நாம் பார்க்கும் வேலை பெரியதாகவே யாருக்கும் தெரியாது அந்த வகையில் நாம் செய்யும் வேலைகள் அனைத்தையும் குறை சொல்லி நம்மை எப்பொழுதும் திட்டிக்கொண்டே இருக்கின்ற இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்யலாம் அந்த சுலபமான பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

உயர் அதிகாரிகளின் தொல்லை

நாம் எந்த இடத்தில் வேலை பார்த்தாலும் நமக்கு தொடர்ந்து தொல்லைகளும் பிரச்சனைகளும் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும் அப்படி இருக்கையில் நாம் வேலை பார்க்கும் இடத்தில் அந்த தொல்லைகளையும் தாண்டி நல்ல பெயர் வாங்குவதற்காக மட்டுமே இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகிறோம். இது உங்களுக்கும் உங்களுடைய உயர் அதிகாரிகளுக்கும் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்காக செய்யக்கூடிய ஒரு பரிகாரம் என்றே சொல்லலாம். இந்த பரிகாரத்தை நாம் புதன் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டும். ஆனாலும் ஞாயிற்றுக்கிழமையும் மிகவும் சிறந்ததாக உள்ளது எனவே இந்த பரிகாரத்தை காலையில் பூஜை அறையில் அமர்ந்து தான் செய்ய வேண்டும்.

நல்ல பெயர் வாங்குவதற்கான பரிகாரம்

இந்த பரிகாரம் செய்வதற்கு பூஜை அறையில் உள்ள கற்பூரம் காட்டும் தட்டு அல்லது உங்கள் வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு சிறிய தட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் இரண்டு கற்பூரத்தை வைத்து பிறகு இரண்டு உடையாத முழு கிராம்பையும் வைக்க வேண்டும். கிராம்பை தட்டில் வைக்கும் பொழுது உங்களுடைய அனைத்து வகையான பிரச்சனைகளையும் மனதில் நினைத்துக் கொண்டு உயர் அதிகாரிகளுடன் இருக்கும் பிரச்சனை நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு கற்பூரத்தில் அந்த கிராம்பை முழுவதுமாக எரிய வைக்க வேண்டும் கற்பூரம் நமக்கு வேண்டுமென்றால் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்.

முழுவதுமாக கிராம்பு கற்பூரத்தில் எரிந்த பிறகு அதனை யாருடைய காலம் படாத இடத்தில் போட்டு விட வேண்டும் புதன்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம் அப்படி தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து நல்ல பலன் கிடைக்கும்.

தீர்ந்து போகும் பிரச்சனைகள்

பொதுவாக நாம் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் பரிகாரம் செய்திருப்போம் அந்த வகையில் வேலை பார்க்கும் இடத்தில் நமக்கு பெரியதாக இருக்கக்கூடிய இந்த உயர் அதிகாரிகளின் பிரச்சனைக்கு இந்த பரிகாரத்தை தாராளமாக செய்து அதன் மூலம் நீங்கள் பலன் பெறலாம் இந்த பரிகாரத்தை முழு மனதோடு நம்பிக்கையோடு செய்து வந்தால் உங்களுக்கு அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடித்து, பணம் வரவு அதிகரிக்க இப்படி மட்டும் தீபம் ஏற்றுங்கள் மோதும்!