வறுமை என்பது மிகக் கொடிய ஒரு வியாதியைப் போன்றது. இதன் வலியும் வேதனையும் அடுத்த வேளை என்ன செய்வது என்று புரியாத நிலையில் வாழுபவர்களுக்கு தான் தெரியும். இன்றளவும் பல குடும்பங்கள் பொருளாதார சூழ்நிலையில் பின் தங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் எத்தனை பாடுபட்டும் அடுத்த கட்டத்தை அடைய முடியாத நிலையில் துன்பப்படுகிறார்கள்.
இந்த கொடுமையில் இருந்து வெளி வருவதற்கு பெரியவர்கள் நமக்கு பல வழிகளை கூறியுள்ளார்கள். அதில் ஒன்றுதான் இந்த விளக்கு பரிகாரம். இதனை ஒரு மாதம் தொடர்ந்து நமது வீட்டில் செய்து வர வறுமை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். அது என்ன பரிகாரம் என்பதனை பற்றி இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.
வறுமையை விரட்டி அடிக்க ஏற்ற வேண்டிய தீபம்
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு தேவையான முக்கிய பொருள் மருதாணி. மருதாணி மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவே கருதப்படுகிறது இதனை பெண்கள் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டால் சகல சௌபாக்கியமும் அவர்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்படி ஒரு மகத்துவமான இலையை வைத்து தான் நாம் இந்த தீபத்தை ஏற்ற இருக்கிறோம்.
இந்த தீபம் ஏற்றுவதற்கு வியாழன், வெள்ளி அல்லது பௌர்ணமி தினங்கள் மிகவும் சிறந்தவை. ஒரு பித்தளை தட்டை நன்கு விளக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அந்த தட்டு நிறைய மருதாணி இலைகளை வைத்து அதன் மேல் 3 கிராம்பு மற்றும் 3 ஏலக்காயை வைக்கவும். பின் அதுமேல் கை நிறைய சில்லறை காசுகளை பரப்பி விடுங்கள். தட்டை சுற்றி வாசனை மிக்க மலர்களை வைத்து விடுங்கள்.
மகாலட்சுமி மற்றும் குபேரர்
இந்த சில்லறை காசுகளின் மேல் ஒரு மண் அகலை வைத்து அதில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் உங்கள் வசதிக்கேற்ப ஏதேனும் ஒன்றை ஊற்றி அதில் பஞ்சு திரி போட்டு மகாலட்சுமி தாயார் அல்லது குபேரர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து உங்களின் வறுமை நிலை நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை நீங்கள் மாதம் ஒரு முறை ஏற்றினால் கூட போதும்.
பொதுவாக பெண்கள் மருதாணியை கையில் இட்டுக் கொள்ளும் பொழுது அவர்கள் மகாலட்சுமியாகவே பார்க்கப்படுகிறார்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் மருதாணி இட்டுக்கொண்டு மகாலட்சுமி தாயாரிடம் என்ன வேண்டினாலும் மகாலட்சுமி தாயார் பரிபூரணமாக அவர்களுக்கு அதனை கொடுப்பார் என்பது நம்பிக்கை. இவ்வளவு நன்மைகள் வாய்ந்த மருதாணியை வைத்து நாம் விளக்கு ஏற்றும் பொழுது வீட்டில் இருக்கும் வறுமை அறவே நீங்கிவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை இந்த ஒரு தீப வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து வறுமையில்லா வாழ்க்கையை வளமுடன் வாழ வழி தேடி கொள்ளலாம்.