சுவையான ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவரொட்டி வறுவல் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!

நகர்ப்புறங்களில் ரோட்டுக்கடை உணவுகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அது சாம்பாரில் தொடங்கி சட்னி, குருமா, சால்னா என தொடர்கிறது. கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெ

By Prem Kumar · 3/6/2024

நகர்ப்புறங்களில் ரோட்டுக்கடை உணவுகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அது சாம்பாரில் தொடங்கி சட்னி, குருமா, சால்னா என தொடர்கிறது. கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களை காட்டிலும் கையேந்தி பவன்களில் இருக்கும் ருசியும் தரமும் மக்களை கவர்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் ரோட்டுக்கடையில் பரிமாறப்படும் ஸ்பெஷல் சுவரொட்டி வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

அசைவத்தில் ஆடு, கோழி, மீன் என பல வகைகள் உள்ளன. இவற்றில் ஆட்டு இறைச்சி மிகவும் சத்துள்ள ஒன்றாக உள்ளது. அதிலும் நமது ஊர்களில் கிடைக்கும் வெள்ளை ஆட்டு இறைச்சியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. தற்போது, இந்த ஆட்டு இறைச்சியில் உள்ள பாகங்களை சாப்பிடுவதை பலர் தவிர்த்து விட்டனர் என்றே கூறலாம். ஏனென்றால் இவற்றில் கிடைக்கும் பாகங்களை விதவிதமாகவும், நல்ல டேஸ்ட்டியிலும் சமைக்க பலர் கற்றுக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஆட்டு இறைச்சியில் கிடைக்கும் முக்கிய பாகமாக உள்ள சுவரொட்டியை இப்போது பலரும் விரும்பி வருகின்றனர்.

சுவரொட்டியை முக்கிய பாகம் என குறிப்பிட சில முக்கிய காரணங்கள் உள்ளன. சிறப்பான மருத்துவக்‌ குணங்களைக்‌ கொண்ட சுவரொட்டி வாய்ப்புண்‌, வயிற்றுப்புண்‌ உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்து ஆக செயல்படுகிறது. உப்பு சேர்க்காமல்‌ இதில் சூப் தயாரித்து உண்டு வந்தால்‌ மிகுந்த பலன்‌ உண்டு என்கிறார்கள் ஊட்டச்சத்து மருத்துவர்கள். இது வழக்கமாக நாம் சாப்பிடும் உணவு வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த ரெசிபி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை இருக்கும். வாருங்கள்! ருசியான ரோட்டுக்கடை சுவரொட்டி வறுவல் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

Recipes AMP · Quick view
View full