சுட சுட ஸ்வீட் கார்ன் பிரியாணி இனி இப்படி செய்யுங்க!
இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அ
இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு.
நான் வெஜ் சாப்பிடாத, காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே வெஜிடபிள் பிரியாணி ஆகும். இது பல வகையான காய்கறிகள் அரிசி மற்றும் மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பிரியாணியில் பலவகை உண்டு. அதில் இன்று நாம் காண இருப்பது ஸ்வீட் கார்ன் பிரியாணி. சாலையோரத்தில் தள்ளுவண்டியில் எரியும் நெருப்பில் சோளக்கதிரை பலரும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்வீட் கார்ன் எவ்வளவு சுவையாக இருக்கிறதோ அதே அளவுக்கு நம் மனது மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை தரும். சுவீட் கார்னில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை இருக்கின்றன.
அவை நம் ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக்கொள்ள உதவுகிறது. பொதுவாக ஸ்வீட் கார்னை வேக வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த ஸ்வீட் கார்னைக் கொண்டு அற்புதமாக ஒரு பிரியாணி தயாரித்தால் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு ஸ்வீட் கார்ன் பிடிக்குமானால், அதைக் கொண்டு மறக்காமல் பிரியாணி செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும். இதை செய்வது சுலபம் ஆனால் சுவையோ அபாரமாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான ஸ்வீட் கார்ன் கபாப் இப்படி செஞ்சி பாருங்க!