சுட சுட ஸ்வீட் கார்ன் பிரியாணி இனி இப்படி செய்யுங்க!

- Advertisement -

இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு.

-விளம்பரம்-

நான் வெஜ் சாப்பிடாத, காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே வெஜிடபிள் பிரியாணி ஆகும். இது பல வகையான காய்கறிகள் அரிசி மற்றும் மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பிரியாணியில் பலவகை உண்டு. அதில் இன்று நாம் காண இருப்பது ஸ்வீட் கார்ன் பிரியாணி. சாலையோரத்தில் தள்ளுவண்டியில் எரியும் நெருப்பில் சோளக்கதிரை பலரும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்வீட் கார்ன் எவ்வளவு சுவையாக இருக்கிறதோ அதே அளவுக்கு நம் மனது மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை தரும். சுவீட் கார்னில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை இருக்கின்றன.

- Advertisement -

அவை நம் ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக்கொள்ள உதவுகிறது. பொதுவாக ஸ்வீட் கார்னை வேக வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த ஸ்வீட் கார்னைக் கொண்டு அற்புதமாக ஒரு பிரியாணி தயாரித்தால் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு ஸ்வீட் கார்ன் பிடிக்குமானால், அதைக் கொண்டு மறக்காமல் பிரியாணி செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும். இதை செய்வது சுலபம் ஆனால் சுவையோ அபாரமாக இருக்கும்.

Print
No ratings yet

ஸ்வீட் கார்ன் பிரியாணி | Sweet Corn Briyani Recipe In Tamil

இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. நான் வெஜ் சாப்பிடாத, காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே வெஜிடபிள் பிரியாணி ஆகும். இது பல வகையான காய்கறிகள் அரிசி மற்றும் மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பிரியாணியில் பலவகை உண்டு. அதில் இன்று நாம் காண இருப்பது ஸ்வீட் கார்ன் பிரியாணி.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Sweet Corn Briyani
Yield: 4 People
Calories: 88kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1 ஸ்வீட் கார்ன்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் பிரியாணி தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • புதினா, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் ஸ்வீட் கார்ன் தோல் உரித்து, சோளத்தை பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லி, புதினா இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, முந்திரி பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசம் போனதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
  • பின் பிரியாணி மசாலா, தனியாத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் பிரித்து வைத்துள்ள சோளத்தை சேர்த்து கலந்து விடவும்.
  • அதன்பிறகு தயாராக வைத்துள்ள தேங்காய் பால், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
  • பின் ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். குக்கரை திறந்து கொஞ்சம் நெய், புதினா, கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான ஸ்வீட் கார்ன் பிரியாணி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 88kcal | Carbohydrates: 1.9g | Protein: 8.3g | Fat: 1.4g | Sodium: 15mg | Potassium: 270mg | Fiber: 6g | Vitamin A: 7IU | Calcium: 20mg | Iron: 5.2mg

இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான ஸ்வீட் கார்ன் கபாப் இப்படி செஞ்சி பாருங்க!