இது கொஞ்சம் புதுசு! கடலைப்பருப்பே இல்லாமல் சோளம் வடை. அதுவும் உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியம் சோளம் சேர்த்த வடை இது!

- Advertisement -

இதை குண்டூர் ஸ்டைல் வடை என்று சொல்லுவார்கள். ஆனால் இதில் கடலைப்பருப்பு சேர்க்கப் போவதில்லை. வேறு ஒரு வித்தியாசமான பொருளை சேர்க்கப் போகின்றோம். கடலைப்பருப்பு சேர்க்கவில்லை என்றால், வேறு என்ன இதில் சேர்க்கலாம். உங்களால் கெஸ் பண்ண முடியுதா? யோசிச்சுக்கிட்டே இந்த ரெசிபிக்குள் செல்வோம். இப்படியும் ஒரு மசால் வடை செய்து ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் வாங்க.

-விளம்பரம்-

இந்த வடையை எந்த சீக்ரெட் பொருள் சேர்த்து செய்யப் போகின்றோம் என்று டக்குனு பார்த்து விடலாம். சோளம்  தாங்க. ஸ்வீட் கான். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்: ஸ்வீட் கார்னில் உள்ள விட்டமின் பி மற்றும் கார்போஹைட்ரேட், இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது. செல் வளர்ச்சியை மேம்படுத்தும்: ஸ்வீட் கார்னில் உள்ள விட்டமின்கள், மெக்னீசியம், செலினியம், துத்தநாகம் போன்றவை உடற்செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.வேக வைக்கக் கூடாது. பச்சையாக இருக்கக்கூடிய ஸ்வீட் கானை வைத்து தான் இன்றைக்கு வடை செய்யப் போகின்றோம்.

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி ஸ்னாக்ஸ் டிபன் என்றால் அது வடைதான். அந்த வடையில் நார்ச்சத்து நிறைந்த இந்த சோளத்தை கலந்து சுட்டு கொடுங்கள். உடலுக்கு தேவையான நார்ச்சத்து முழுவதும் இந்த தோசையில் இருந்தே கிடைத்துவிடும். ஸ்வீட் கான்  உங்களுக்கு எது கிடைத்தால் அதை பயன்படுத்தி இந்த வடை செய்வது என்ற செய்முறையை தெரிந்துகொள்வோமா.

Print
5 from 1 vote

சோளம் வடை | Sweet Corn Vada Recipe In Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிஸ்னாக்ஸ் டிபன் என்றால் அது வடைதான். அந்த வடையில் நார்ச்சத்து நிறைந்த இந்த சோளத்தைகலந்து சுட்டு கொடுங்கள். உடலுக்கு தேவையான நார்ச்சத்து முழுவதும் இந்த வடையில் இருந்தேகிடைத்துவிடும். ஸ்வீட் கான்  உங்களுக்கு எதுகிடைத்தால் அதை பயன்படுத்தி இந்த வடை செய்வது என்ற செய்முறையை தெரிந்துகொள்வோமா
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Sweet Corn Vada
Yield: 4
Calories: 74kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

அரைக்க

  • 2 வரமிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 5 தோலுரித்த பூண்டு
  • 1 இன்ச் இஞ்சி தோல் சீவி நறுக்கியது
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 2 பெரிய கைப்பிடி ஸ்வீட் கான்

அரைத்த விழுதுடன் சேர்க்க

  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 2 கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு,

செய்முறை

  • எல்லா பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து தனியாக ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
  • இந்த விழுதோடு அரிசி மாவு – 2 இரண்டு டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 கைப்பிடி அளவு, பொடியாக, உப்பு தேவையான அளவு, போட்டு உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • இதை மசால் வடை  போலவே உருட்டி தட்டி நன்றாக காய்ந்திருக்கும் எண்ணெயில் போட்டு அப்படியே சுட சுட வடையை சுட்டு சாப்பிட்டு பாருங்கள். அத்தனை அருமையாக இருக்கும்.
  • இது கூட ஏதாவது ஒரு சட்னி தொட்டுக்கோங்க. இதனுடைய சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். உடலுக்கு இந்த வடை ஆரோக்கியம் தானே. ஸ்வீட் கான் சேர்த்து இருக்கின்றோம்.  வேற என்ன வேண்டும்.

செய்முறை குறிப்புகள்

கட்டாயமாக இதற்கு வேக வைக்காத ஸ்வீட் கான் தான் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் காயாத போது வடையை எண்ணெயில் போட்டால் எண்ணெய் நிறைய குடித்து விடும். அடுப்பை ஃபுல் ஃபிலிமில் வைத்து நன்றாக காய்ந்த எண்ணெயில் இந்த வடையை போடுங்க. பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து வடையை சிவக்க விட்டு எடுங்க. அப்போதுதான் உள்ளே நன்றாக வெந்திருக்கும்

Nutrition

Serving: 100g | Calories: 74kcal | Carbohydrates: 12.6g | Protein: 2.8g | Fat: 0.88g | Potassium: 165mg | Fiber: 1.65g | Calcium: 14.84mg | Iron: 0.68mg