நாவில் எச்சில் ஊற வைக்கும் ருசியான சர்க்கரை வள்ளிக்கிழங்கு வத்த குழம்பு இப்படி செஞ்சி பாருங்கள்!

- Advertisement -

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தானே நாம் எல்லோரும் சாப்பிடுவோம். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து ஒரு சூப்பரான காரசாரமான வத்த குழம்பு ரெசிபியை தான் இன்னைக்கு தெரிஞ்சுக்க போறோம். இதுவரைக்கும் நீங்கள் கேள்விப்படாத ஒரு ரெசிபியாக இருக்கப்போகிறது.  வித்தியாசமான இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.. அனைவர்க்கும் பிடிக்கும்.

-விளம்பரம்-

விலை மலிவு மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கும் ஒன்று.சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

- Advertisement -

இது உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைத்து, இயற்கையாகவே உடலை சுத்தம் செய்யும் பண்புகளை கொண்டுள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கு ஆரோக்கியமான உணவு, அதில் இந்த கார சாரா மான வைத்த குழம்பு செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும். வாங்க இதை இப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
5 from 1 vote

சர்க்கரைவள்ளி வத்த குழம்பு | Sweet Potato Vatha Kulambu

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தானே நாம் எல்லோரும் சாப்பிடுவோம். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து ஒரு சூப்பரான காரசாரமான வத்த குழம்பு ரெசிபியை தான் இன்னைக்கு தெரிஞ்சுக்க போறோம்.விலை மலிவு மற்றும் எளிதில் கிடைக்கக் கூடிய கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கும் ஒன்று.இதுவரைக்கும் நீங்கள் கேள்விப்படாத ஒரு ரெசிபியாக இருக்கப்போகிறது.  வித்தியாசமான இந்த ரெசிபியைசெய்து பாருங்கள்.. அனைவர்க்கும் பிடிக்கும். வாங்க இதை இப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Sweet Potato Vatha Kulambu
Yield: 4
Calories: 0.285kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  • புளி எலுமிச்சம்பழ அளவு
  • 6 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 2 ஸ்பூன் வர மல்லி
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் துவரம் பருப்பு
  • 4 வர மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் சீரகம் 
  • 1/2 ஸ்பூன் உளுந்து
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 வரமிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • சிறிய துண்டு வெல்லம்

செய்முறை

  • முதலில் 250 கிராம் அளவு உள்ள சர்க்கரைவள்ளிக்கிழங்கை தோல் சீவி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து தயாராக எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு சிறிய எலுமிச்சம்பழ அளவு உள்ளபுளியை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து கரைத்து புளிக்கரைசல் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • அடுத்த படியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள்.அதில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் வர மல்லி– 2 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், துவரம் பருப்பு – 1 ஸ்பூன், இந்தபொருட்களை போட்டு முதலில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  • எல்லா பொருட்களும் முக்கால் பாகம் வழிபட்டுவந்த பிறகு, இறுதியாக வர மிளகாய் – 4, கறிவேப்பிலை – 1 கொத்து சேர்த்து வறுத்து இதைஅப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றிக் கொள்ளுங்கள். இது நன்றாக ஆறிய பின்பு பொடி செய்துஅப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
  • அடுத்தபடியாக குழம்பை தாளித்த அடுப்பில் ஒருகடாயை வைத்து அதில் 3 – டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய்காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம்  –1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து,வரமிளகாய் – 2 சேர்த்து தாளித்து, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல் சேர்த்து நன்றாகவதக்கி விடுங்கள்.
  • வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கி வைத்திருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை கடாயில் கொட்டி நன்றாக வதக்கி விட்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்குதேவையான அளவு உப்பு தூளைத் தூவி, ஒரு மூடி போட்டு நல்லெண்ணெயில் கிழங்கை பாதி அளவுவேக வைத்து விடுங்கள்.
  • கிழங்கு பாதி அளவு வெந்ததும், மிக்ஸியில் அரைத்துவைத்திருக்கும் மசாலா பொடியை கடாயில் போட்டு, கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலைஊற்றி, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, இந்த மசாலாவுக்கு தேவையான அளவுஉப்பு தூளைத் தூவி கொதிக்கவிட்டு, உப்பு காரம் சரி பார்த்துக் கொள்ளுங்கள். (இந்த குழம்புகொதிக்க கொதிக்க கெட்டியாக தொடங்கும்.)
  • பின்பு இந்த குழம்பை மூடி புளியின் பச்சை வாடைபோகும் வரை, எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை மிதமான தீயில் கொதிக்க வையுங்கள். இடையிடையேகரண்டியை வைத்து கலந்து கொடுங்கள். இறுதியாக ஒரு சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து கலந்துவிட்டுசுவைத்துப் பாருங்கள்.
  • அருமையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு வத்த குழம்புதயார். இந்த குழம்பை சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாகஇருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.
     

Nutrition

Serving: 400g | Calories: 0.285kcal | Carbohydrates: 12g | Protein: 12.2g | Fat: 10.4g | Calcium: 3.1mg | Iron: 0.26mg