Advertisement
ஜூஸ்

சுட சுட சுவையான தந்தூரி டீ செய்வது எப்படி ?

Advertisement

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன் வீட்டில் ஆண்கள் அம்மா சாப்பாடு போடு என்ற வார்த்தைக்கு அடுத்து ஆண்கள் அதிகமாக சொல்லும் வார்த்தை அண்ணா ஒரு டீ போடுங்க அந்த அளவிற்கு ஒரு டீயை குடித்து விட்டு அவர்கள் வேலைகளை சரிவர செய்து கொண்டிருப்பார்கள். டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது.

இதையும் படியுங்கள் : அட்டகாசமான சுவையில் தாய் ஐஸ் டீ செய்வது எப்படி ?

Advertisement

சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால் இன்று நாம் சமீபத்தில் பிரபலமாக இருக்கும் தந்துரி டீ சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இந்த தந்தூரி டீயை நீங்கள் உங்கள் வீட்டில் போட்டு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் அடுத்த முறையும் உங்களை இதையே அடிக்கடி போட சொல்லுவார்கள். ஆகையால் இன்று தந்தூரி டீ எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்ஙள்.

தந்தூரி டீ | Tandoori Tea Recipe in Tamil

Print Recipe
டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது. சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால் இன்று நாம் சமீபத்தில் பிரபலமாக இருக்கும் தந்துரி டீ சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இந்த தந்துரி டீயை நீங்கள் உங்கள் வீட்டில் போட்டு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் அடுத்த முறையும் உங்களை இதையே அடிக்கடி போட சொல்லுவார்கள்.
Course Drinks
Cuisine Indian, TAMIL
Keyword Tea, டீ
Prep Time 20 minutes
Advertisement
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 45

Equipment

  • 1 மண் சொம்பு
  • 1 டீ பாத்திரம்
  • 1 பெரிய பாத்திரம்

Ingredients

  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 துண்டு இஞ்சி
  • 4 புதினா இலை
  • 2 ஏலக்காய்
  • 2 ½ tbsp டீ துள்
  • 2 கிளாஸ் தண்ணீர்
  • 2 கிளாஸ் பால்
  • சர்க்கரை தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கிளாஸ் அளவு தண்ணீர் சேர்த்துக் கொண்டு, இதனுடன் ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு துண்டு இஞ்சி, நான்கு புதினா இலை மற்றும் கடைசியாக இரண்டு ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்..
  • பின் இதனுடன் நீங்கள்
    Advertisement
    வழக்கமாக வீட்டிலே பயன்படுத்தும் டீத்தூள் 2 1/2 டீஸ்பூன் பின் டீக்கு தேவையான சர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை எஏதுவாக இருந்தாலும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு டீ நன்கு கொதித்து வரும் பொழுது இதனுடன் இரண்டு கிளாஸ் அளவிலான பால் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் நாம் வைத்திருக்கும் இருக்கும் மண் சொம்புவை அடுப்பில் தீயை அதிகம் வைத்து மண் சொம்பின் அனைத்து இடத்திலும் தீ படுமாறு காட்டிக் கொள்ளவும். பின்பு மண் சொம்பை அப்படியே அடுப்பின் மேல் வைத்து விடுங்கள்.
  • பின் நாம் அடுப்பில் வைத்த டீ நன்கு கொதித்து வந்ததும் வேறொரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து டீ யை நன்கு வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் அடுப்பில் வைத்த மண் சொம்பை ஒரு பாத்திரத்தில் உள்ளே வைத்து கொள்ளவும்
  • பின் நாம் தயார் செய்த டீ யை மன்சொம்பில் ஊற்றிக் கொள்ளுங்கள் இப்போது மண் சொம்பின் சூடு காரணமாக டீ பொங்கி வர ஆரம்பிக்கும் அவ்வளவு தான் நமக்கு மிகவும் பிடித்த சுவையான தந்துரி டீ இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4people | Calories: 45kcal | Protein: 16g | Saturated Fat: 1.4g | Potassium: 89mg | Sugar: 10.2g | Calcium: 13.13mg

English Overview : tandoori tea is one of the most important dishes in india. tandoori tea recipe or tandoori tea seivathu eppadi or tandoori tea recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

2 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

2 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

3 மணி நேரங்கள் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

4 மணி நேரங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

5 மணி நேரங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

6 மணி நேரங்கள் ago