அட்டகாசமான சுவையில் தாய் ஐஸ் டீ செய்வது எப்படி ?

- Advertisement -

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன் வீட்டில் ஆண்கள் அம்மா சாப்பாடு ஏன் என்ற வார்த்தைக்கு அடுத்து ஆண்கள் அதிகமாக செல்லும் வார்த்தை அண்ணா ஒரு டீ போடுங்க அந்த அளவிற்கு ஒரு டீயை குடித்து விட்டு அவர்கள் வேலைகளை சரிவர செய்து கொண்டிருப்பார்கள். டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான அவல் வடை செய்வது எப்படி ?

- Advertisement -

சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. இருந்தாலும் அவர்கள் வீட்டில் டீ குடிக்கும் போது ஏதாவது புதிய வகையில் டீ செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் கண்டிப்பாக இந்த தாய் ஐஸ் டீயை செய்து கொடுங்கள். இதை வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் குளிர்பானமாக நீங்கள் செய்து கொடுக்கலாம். இன்று இந்த தாய் ஐஸ் டீ எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

Print
No ratings yet

தாய் ஐஸ் டீ | Thai Ice Tea Recipe in Tamil

டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது. சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. இருந்தாலும் அவர்கள் வீட்டில் டீ குடிக்கும் போது ஏதாவது புதிய வகையில் டீ செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் கண்டிப்பாக இந்த தாய் ஐஸ் டீயை செய்து கொடுங்கள். இதை வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் குளிர்பானமாக நீங்கள் செய்து கொடுக்கலாம். இன்று இந்த தாய் ஐஸ் டீ எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: Drinks
Cuisine: Indian, TAMIL
Keyword: Tea, டீ
Yield: 2 people
Calories: 20kcal

Equipment

  • 1 டீ பாத்திரம்
  • 2 கண்ணாடி ஜார்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • ½ கப் டீ தூள்
  • ½ கப் சக்கரை
  • 5 கப் தண்ணீர்
  • 15 ஐஸ் கட்டிகள்
  • 4 tbsp கன்டென்ஸ் மில்க்

செய்முறை

  • முதலில் ஒரு டீ போடும் பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொண்டு அதனுடன் 5 கப் அளவில் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள், பின்பு இதனுடன் நீங்கள் வீட்டில் உபயோக படுத்தும் டீ தூளாக இருந்தாலும் நன்கு தரமான அரை கப் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
  • பின் இதனுடன் அரை கப் அளவிலான சுத்தமான சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள், பிறகு நாம் அடுப்பில் உள்ள டீ நான்கு கொதித்ததும் தீயை குறைத்து வைத்து ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு அடுப்பை அணைத்து கடாயை கீழே இறக்கி வைத்து விட்டு டீயை நன்கு குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின்பு இரண்டு கண்ணாடி ஜாரை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கண்ணாடி ஜாரிலும் 6 ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளவும்.
  • அதன் பின் நாம் குளிர வைத்த டீயை நாம் எடுத்து வைத்துள்ள கண்ணாடி ஜாரில் அரிப்பை வைத்து வடிகட்டி இரண்டு கண்ணாடி ஜாரிலும் முக்கால் அளவு டீ இருக்கும் படி ஊற்றிக் கொள்ளுங்கள் அதன் பிறகு ஒவ்வொரு கண்ணாடி ஜாரிலும் இரண்டு டீஸ்பூன் அளவு கன்டென்ஸ் மில்க் சேர்த்து கொள்ளவும்.
  • அதன் பின்பு கடைசியாக இரண்டு ஜாரையும் ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக கலக்கி விட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் தாய் ஐஸ் டீ இனிதே தயாராகிவிட்டது. இதை நீங்கள் வெயில் காலங்களில் குளிர்பானமாகவும் பருகலாம்.

Nutrition

Serving: 2people | Calories: 20kcal | Protein: 9g | Cholesterol: 5.7mg | Sugar: 24.5g

English Overview: thai ice tea is one of the most important dishes in india. thai ice tea recipe or thai ice tea seivathu eppadi or thai ice tea recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here