Advertisement
சைவம்

மரவள்ளிகிழங்கு வைத்து கட்லெட் செய்வது இவ்வளவு ஈஸியா ? சத்துகள் நிறைந்த, இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க!

Advertisement

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.

இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள்.

Advertisement

இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. இவை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேறு வேறு காய்கறிகளை சேர்த்து செய்கிறார்கள். வெவ்வேறு காய்கறிகள் சேர்த்தாலும் உருளைக்கிழங்குக்கு மாற்று கிடையாது. மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு 15 நிமிடங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள், இந்த மரவள்ளிகிழங்கு கட்லெட் செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

மரவள்ளிகிழங்கு கட்லெட் | Tapioca Cutlet Recipe In Tamil

Print Recipe
சமோசா,பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு.அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல
Advertisement
காய்கறிகளை சேர்த்துஇவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Tapioca Cutlet
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 120

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் வேக வைத்த மரவள்ளி கிழங்கு
  • 1 வெட்டின வெங்காயம் பொடியாக
  • 2 பச்சைமிளகாய்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு
  • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகுதூள்
  • 1/4 ஸ்பூன் கரம் மசாலா
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கு
  • கறிவேப்பிலை சிறிது
  • பச்சை கொத்தமல்லி சிறிது
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • 1/4 கப் சோளமாவு
  • பிரெட் கிரம்ஸ் தேவைக்கு

Instructions

  • முதலில் மரவள்ளி கிழங்கை மஞ்சள்தூள் மற்றும்  உப்புசேர்த்து நன்கு வேக வைத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். பின் சோள மாவை தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும், பிரெட் கிரம்ஸ்சை தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் 1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து, வெங்காயம், நறுக்கின பசிமிளகாய், இஞ்சி பூண்டு, கருவேப்பிலை சேர்த்து 3 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
  • மசித்து வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கில் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா, உப்பு, மல்லி சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு பிசைந்து வைத்துதுக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய விட்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை சின்ன உருண்டைகள் செய்து கொள்ளவும் அல்லது விருப்பமான ஷேப்பில் கட்லேட் செய்துக் கொள்ளவும்.
  • கட்லெட்டை கரைத்து வைத்திருக்கும் சோள மாவில் முக்கி பிரெட் கிரம்ஸ்சில்  புரட்டிஎடுத்து சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
  • ஆரோகியமான,சுவைமிக்க மரவள்ளி கிழங்கு கட்லெட் சுவைக்க தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 120kcal | Carbohydrates: 45g | Protein: 5.5g | Fat: 7.5g | Cholesterol: 93mg | Sodium: 111mg | Potassium: 2896.8mg | Fiber: 6.8g
Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

5 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

12 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

23 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago