மரவள்ளிகிழங்கு வைத்து கட்லெட் செய்வது இவ்வளவு ஈஸியா ? சத்துகள் நிறைந்த, இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க!

- Advertisement -

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.

-விளம்பரம்-

இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள்.

- Advertisement -

இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. இவை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேறு வேறு காய்கறிகளை சேர்த்து செய்கிறார்கள். வெவ்வேறு காய்கறிகள் சேர்த்தாலும் உருளைக்கிழங்குக்கு மாற்று கிடையாது. மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு 15 நிமிடங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள், இந்த மரவள்ளிகிழங்கு கட்லெட் செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

Print
5 from 2 votes

மரவள்ளிகிழங்கு கட்லெட் | Tapioca Cutlet Recipe In Tamil

சமோசா,பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு.அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்துஇவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Tapioca Cutlet
Yield: 4
Calories: 120kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வேக வைத்த மரவள்ளி கிழங்கு
  • 1 வெட்டின வெங்காயம் பொடியாக
  • 2 பச்சைமிளகாய்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு
  • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகுதூள்
  • 1/4 ஸ்பூன் கரம் மசாலா
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கு
  • கறிவேப்பிலை சிறிது
  • பச்சை கொத்தமல்லி சிறிது
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • 1/4 கப் சோளமாவு
  • பிரெட் கிரம்ஸ் தேவைக்கு

செய்முறை

  • முதலில் மரவள்ளி கிழங்கை மஞ்சள்தூள் மற்றும்  உப்புசேர்த்து நன்கு வேக வைத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். பின் சோள மாவை தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும், பிரெட் கிரம்ஸ்சை தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் 1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து, வெங்காயம், நறுக்கின பசிமிளகாய், இஞ்சி பூண்டு, கருவேப்பிலை சேர்த்து 3 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
  • மசித்து வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கில் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா, உப்பு, மல்லி சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு பிசைந்து வைத்துதுக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய விட்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை சின்ன உருண்டைகள் செய்து கொள்ளவும் அல்லது விருப்பமான ஷேப்பில் கட்லேட் செய்துக் கொள்ளவும்.
  • கட்லெட்டை கரைத்து வைத்திருக்கும் சோள மாவில் முக்கி பிரெட் கிரம்ஸ்சில்  புரட்டிஎடுத்து சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
  • ஆரோகியமான,சுவைமிக்க மரவள்ளி கிழங்கு கட்லெட் சுவைக்க தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 120kcal | Carbohydrates: 45g | Protein: 5.5g | Fat: 7.5g | Cholesterol: 93mg | Sodium: 111mg | Potassium: 2896.8mg | Fiber: 6.8g