மண்மணம் மாறாமல் பாரம்பரிய சுவையில் மணத்தக்காளி தண்ணீர் சூப் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே ருசி தான்!

தற்கால அம்மாக்கள் பலரும், சிறுவயதில் தமது கிராமத்தில், பாட்டி அல்லது அம்மா செய்த சமையலை சப்புக்குட்டி சாப்பிட்டோமே என்று மனதில் பல உணவுகளை நினைத்துப் பார்ப்போம், இருப்பினும் அந்த உணவு செய்முறை தெரியாததால் நமது குழந்தைகளுக்கு செய்ய முடியவில்லையே என்று நினைத்திருப்போம். அப்படிப்பட்

By ·

தற்கால அம்மாக்கள் பலரும், சிறுவயதில் தமது கிராமத்தில், பாட்டி அல்லது அம்மா செய்த சமையலை சப்புக்குட்டி சாப்பிட்டோமே என்று மனதில் பல உணவுகளை நினைத்துப் பார்ப்போம், இருப்பினும் அந்த உணவு செய்முறை தெரியாததால் நமது குழந்தைகளுக்கு செய்ய முடியவில்லையே என்று நினைத்திருப்போம். அப்படிப்பட்ட மண் மணம் மாற உணவு தான் இந்த மணத்தக்காளி தண்ணீர் சாறு.

இந்த சாறு பார்ப்பதற்கு என்னமோ பச்சை தண்ணீர் போல் தான் இருக்கும் ஆனால் அதன் ருசியோ இளநீர் போல் அவ்வளவு ருசியாக இருக்கும். அதன் மனம் சொல்லவே வேண்டாம். மணத்தக்காளி கீரைக்கு என்றே தனி மருத்துவ குணம் உண்டு. சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம், சளியை நீக்குவதோடு, வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி தண்ணீர் சாறு அரிசி கலையும் தண்ணீரில் செய்வார்கள் இதில் அதிக மசாலாக்கள் எதையும் சேர்க்காமல்  செய்யப்படும் இந்த சாறை  சாதத்தில்  ஊற்றி சாப்பிட்டால் வயிற்று பிரச்சனை சரியாகும் . வாங்க இந்த பாரம்பரிய மணத்தக்காளி தண்ணீர் சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை