Advertisement
சைவம்

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

Advertisement

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய் குடைமிளகாய் பாகற்காய் புடலங்காய் வாழைக்காய் சுரைக்காய் சௌசௌ காய் போன்ற காய்கறிகளை அதிகமாக நம்முடைய உடம்பில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது அவரைக்காய் சேர்த்து சாம்பார் வைத்தால் வீடு மணக்கும் என்று சொல்வார்கள்.

அந்த வகையில் அவரைக்காய் வைத்து காரக்குழம்பிற்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடும் அளவிற்கு ஒரு சூப்பரான சிம்பிளான அவரைக்காய் பொரியல் பார்க்க போகிறோம். இந்த அவரைக்காய் பொரியல் சாம்பார் புளி குழம்பு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிட சூப்பரா இருக்கும். ரசம் சாதம் கூட வச்சு சாப்பிடவும் இந்த அவரைக்காய் பொரியல் ரொம்ப டேஸ்ட்டா சூப்பரா இருக்கும். இத செய்வதற்கு நம்ம வீட்டில் இருக்கிற பொருட்கள் மட்டுமே போதுமானது குழந்தைகளுக்கு நல்லா ருசியா செஞ்சு கொடுத்தா அவங்க விரும்பி சாப்பிடுவாங்க இப்ப வாங்க இந்த சூப்பரான அவரைக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Advertisement

அவரைக்காய் பொரியல் | Broad Beans Poriyal In tamil

Print Recipe
அவரைக்காய்வைத்து காரக்குழம்பிற்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடும்அளவிற்கு ஒரு சூப்பரான சிம்பிளான அவரைக்காய் பொரியல் பார்க்க போகிறோம். இந்த அவரைக்காய் பொரியல் சாம்பார் புளி குழம்பு
Advertisement
எல்லாத்துக்கும் வச்சு சாப்பிட சூப்பரா இருக்கும். ரசம் சாதம் கூட வச்சு சாப்பிடவும் இந்த அவரைக்காய் பொரியல் ரொம்ப டேஸ்ட்டா சூப்பரா இருக்கும். இத செய்வதற்கு நம்மவீட்டில் இருக்கிற பொருட்கள் மட்டுமே போதுமானது குழந்தைகளுக்கு நல்லா ருசியா செஞ்சு கொடுத்தா அவங்க விரும்பி சாப்பிடுவாங்க இப்ப வாங்க இந்த சூப்பரான அவரைக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Broad Beans Stir Fry
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings 3
Calories 354

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ அவரைக்காய்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 பெரிய வெங்காயம்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • அவரைக்காய் கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு அதில் காய்ந்த மிளகாய் பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்
  • அதில் நறுக்கி வைத்துள்ள அவரைக்காய் சேர்த்து எண்ணெயிலேயே ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்
  • அவரைக்காய் வேக அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு அவரைக்காய் நன்றாக வெந்ததும் இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் சுவையான அவரைக்காய் பொரியல் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Sodium: 12mg | Potassium: 398mg | Calcium: 12mg
Advertisement
Ramya

Recent Posts

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

3 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

14 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

16 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

24 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago