உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆரோக்கியமான இந்த வெள்ளரிக்காய் சாலட்டை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!!
உடல் எடையை குறைப்பதற்கு குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அதற்கு மிகச் சிறந்த தேர்வு என்றால் சாலட் வகைகள் தான். ஆம். சாலட் வகைகள் அதிகமாக மற்ற உணவுகளை போல சமைக்கப்படாமல் இருப்பதால் அதிலுள்ள ஊட்டச்சத்த
உடல் எடையை குறைப்பதற்கு குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அதற்கு மிகச் சிறந்த தேர்வு என்றால் சாலட் வகைகள் தான். ஆம். சாலட் வகைகள் அதிகமாக மற்ற உணவுகளை போல சமைக்கப்படாமல் இருப்பதால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் நமக்கு கிடைக்கும். உங்களுடைய உணவில் காலை அல்லது இரவு உணவையே சாலட் வடிவில் எடுத்துக் கொள்ளும்போது இன்னும் கூடுதலாக ஊட்டச்சத்துக்களை பெறுவதோடு கார்போஹைட்ரேட் அளவும் குறையும்.
கலோரிகள் குறையும்போது இன்னும் வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியும். அப்படி காலை அல்லது இரவு உணவுக்கு எடுத்துக் கொள்வதற்கு ஏற்ற வெள்ளரிக்காய் சாலட் எப்படி செய்வதென்று பார்ப்போம். வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மிக்க காய்கறிகளில் முக்கியமானது. வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறி என்று சொல்லலாம். உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவும். தொப்பை குறைய தினமும் வெள்ளரிக்காய் சேர்ந்த நீர் குடிப்பதன் மூலம் பலன் பெறலாம்.
வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்தை உடல் உறிஞ்ச உதவுவதோடு அது குடல் இயக்கத்தை திறம்பட செயல்பட வைக்கிறது. தினமும் இந்த வெள்ளரிக்காய் சாலட் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். முடி வளர்ச்சிக்கும் நல்லது. இப்போது வெள்ளரிக்காய் சாலட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியமான இந்த பீட்ரூட் சாலட் ரெசிபி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!