- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பீட்ரூட் வச்சு பீட்ரூட் பொரியல் பீட்ரூட் கூட்டு பீட்ரூட் பச்சடி அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. பீட்ரூட் சாப்பிடுவதால் உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பீட்ரூட்டில் எக்கச்சக்கமான நன்மைகள் இருக்கு. வாரத்துல ஒரு தடவை கண்டிப்பா பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்பவுமே ஒரே மாதிரியா பொரியல் செய்யாமல் இந்த மாதிரி ஒரு தடவை பீட்ரூட் வச்சு ஒரு சூப்பரான பீட்ரூட் சாலட் செஞ்சு பாருங்க. ஆலியா பட் கூட இந்த சாலட் தான் லஞ்சுக்கு சாப்பிடுவாங்களாம்.
அந்த அளவுக்கு ஒரு ஸ்பெஷல் ஆன டிஷ் கண்டிப்பா வீட்ல ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. வீட்ல இருக்குற சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல நம்ம தயிர் தான் முக்கியமான பொருளாக சேர்க்க போறோம் அந்த தயிரை நல்லா வடிகட்டி சேர்த்தால் கிரீமியான ஒரு சூப்பரான சாலட் கிடைக்கும். இந்த டேஸ்டான கிரீமியான சாலட் ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் நீங்க இதை செஞ்சு கொடுக்கலாம் டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வச்சு பத்து நிமிஷத்துல இந்த ரெசிபியை செஞ்சுடலாம். சுட சுட சாதத்துல கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம் அவ்வளவு ருசியா காரக் குழம்பு வைக்கும் போது அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த ரெசிபியை செஞ்சா அவ்ளோ ருசியா இருக்கும் ஒரு தடவ கண்டிப்பா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பீட்ரூட் சாலட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு
Ingredients
Method
பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கி பத்து நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறிய பிறகு ஒரு பாத்திரத்தில் பீட்ரூட்டை சீவி சேர்த்துக் கொள்ளவும்.
தயிரை ஒரு வடிகட்டியில் சேர்த்து தண்ணீரை வடித்து அந்த தயிரை பீட்ரூட்டில் சேர்த்து கிளறவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு பெருங்காயம், சீரகம் சேர்த்து தாளித்து பீட்ரூட்டில் சேர்த்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவையான பீட்ரூட் சாலட் தயார்.






