வார இறுதியில் மீன் எடுத்தால் எப்போதும் போல் இல்லாமல் மீனை உதிர்த்து சேர்த்து இப்படி மீன் பொரியல் செய்து பாருங்கள்!!
அசைவ உணவுப் பட்டியலில் உள்ள கோழி, ஆடு, நண்டு, மீன் ஆகியவற்றில் ஆரோக்கியத்தில் முதல் இடம் பிடிப்பது மீன். மீன் உடலுக்கு மிகவும் ஏற்றது. மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆ
அசைவ உணவுப் பட்டியலில் உள்ள கோழி, ஆடு, நண்டு, மீன் ஆகியவற்றில் ஆரோக்கியத்தில் முதல் இடம் பிடிப்பது மீன். மீன் உடலுக்கு மிகவும் ஏற்றது. மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்களான ஒமேகா 3 இதில் உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் விளங்குகிறது. மீனில் கொழுப்புச் சத்தை விட புரதச் சத்துகள் மிகுந்துள்ளன.
மீனில் ஒமோகா-3 என்ற ஒரு வகை அமிலம் உள்ளது. இது நம் உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுவதுடன் புற்று நோயிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பொதுவாக மீன் என்றாலே வாசனை மிக்க குழம்பும், சாப்பிட சாப்பிட திகட்டாத வறுவலும் தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். அதனால் எப்போதும் போல் குழம்பு, வறுவல் என்று செய்யாமல் மீன் உதிர்த்து சேர்த்து ஒரு காரசாரமான மீன் பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரித்தால், உங்கள் குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும் என்றால் அவர்களுக்கு மாலை வேளையில் இந்த மீன் பொரியல் செய்து கொடுங்கள். இந்த மீன் பொரியல் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது குளிர்காலத்தில் மாலை வேளையில் செய்து சாப்பிட ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ். இப்போது சுவையான மீன் பொரியல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அடுத்த முறை மீன் வாங்கினால் குழம்பு வைக்காமல் ஒரு முறை இந்த மீன் ஆம்லேட் செய்து பாருங்கள்!!