உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் காலை வேளையில் இந்த ராகி சூப் மட்டும் செய்து குடித்து பாருங்கள்!!
நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? உங்களின் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? அப்படியானால் உணவில் முதலில் கவனம் செலுத்துங்கள். அதுவும் காலையில் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவு மிகவும் இன்றியமையாதது. நீண்ட நேரம் கழித்து காலையில் உட்கொள்ளும் உணவு மிகவும் சத்தானதாக இருந்தா
நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? உங்களின் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? அப்படியானால் உணவில் முதலில் கவனம் செலுத்துங்கள். அதுவும் காலையில் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவு மிகவும் இன்றியமையாதது. நீண்ட நேரம் கழித்து காலையில் உட்கொள்ளும் உணவு மிகவும் சத்தானதாக இருந்தால், அதில் உள்ள சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும். இந்நிலையில் காய்கறிகள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் சூப்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது சிறப்பான பலனைப் பெறக்கூடும். அதுவும் ராகி சூப்பை குடிக்கும் போது எடையில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, வேறு பல நன்மைகளையும் பெறலாம்.
ராகி மற்ற தானியங்களை போலவே அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம் ஆகும். ரத்த சோகை, அதிக எடை, தூக்கப் பிரச்சினைகள், பதட்டம் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு ஆரோக்கிய உணவாகும். இந்த ராகியில் அதிகமான ஆக்சிஜன் ஏற்றிகள், வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளன. இந்த ராகியை தினமும் மிதமான அளவில் உட்கொண்டு வந்தால், அது எடை இழப்புக்கு உதவுவதோடு, செரிமானத்தை மேம்படுத்தும், இரத்த சர்க்கரையை பராமரிக்க உதவும் மற்றும் கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி சூப் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான ராகி கார கொழுக்கட்டை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!