ருசியான சேலம் சிக்கன் சுக்கா, அசத்தலான சுவையில் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

சிக்கன்ல பல ரெசிபிஸ் இருக்கு இருந்தாலும் இந்த சிக்கன்ல நம்ம சுக்கா செய்து சாப்பிட போறோம். மட்டன் சுக்கா சாப்டு இருப்போம். இப்ப நம்ம சிக்கன்ல சிக்க்கா செய்ய போறோம். எல்லா உணவுப் பொருள்களையும் எல்லாவிதமான உணவையும் செய்ய ஆரம்பிச்சாசி. அதாவது சைவ உணவுகளை கூட அசைவ உணவு சுவையில் செய்ய ஆரம்பிச்சுட்டோம்.

-விளம்பரம்-

சைவத்துல அசைவ உணவோடு சுவையை கொண்டு வரதுக்கு நிறைய பொருள்களும் வந்திருச்சு. அதே மாதிரி இப்போ மட்டன்ல மட்டும் செய்ற சுக்காவை சிக்கன்லையும் செய்து சாப்பிட போறோம். எல்லாமே ரொம்ப ருசியாவும் சுவையாகவும் இருக்கிறதுனால விதவிதமா உணவுகளை புதுசு புதுசா செய்றப்போ அது எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த சுவையான சிக்கன் சுக்கா சேலம் ஸ்டைலை எப்படி செய்வது என்று தெரிஞ்சிக்க இருக்கோம்.

- Advertisement -

பொதுவாக சிக்கன்ல 65, சுக்கா, வறுவல் இது மாதிரி செய்தா எல்லாருமே அதிகமா சாப்பிடுவாங்க. அதுலயும் இந்த மாதிரி சுக்கா எல்லாம் செய்து கொடுக்கும் போது ரொம்பவே பிடிக்கும். இந்த சிக்கன் சுக்கா எல்லா சாதத்துக்குமே ரொம்ப டேஸ்டா இருக்கும் சேர்த்து வைத்து சாப்பிடுவதற்கு. இந்த மாதிரி சேலம் ஸ்டைல நீங்களும் சிக்கன் சுக்கா ட்ரை பண்ணி வீட்ல எல்லாரும் கொடுத்து பாருங்க எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க இந்த சுவையான சிக்கன் சுக்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
4 from 1 vote

சேலம் சிக்கன் சுக்கா | Selam Chicken Chukka Recipe In Tamil

சுவையான சிக்கன்சுக்கா சேலம் ஸ்டைலை எப்படி செய்வது என்று தெரிஞ்சிக்க இருக்கோம். பொதுவாக சிக்கன்ல 65, சுக்கா, வறுவல் இது மாதிரி செய்தா எல்லாருமே அதிகமா சாப்பிடுவாங்க. அதுலயும் இந்தமாதிரி சுக்கா எல்லாம் செய்து கொடுக்கும் போது ரொம்பவே பிடிக்கும். இந்த சிக்கன் சுக்காஎல்லா சாதத்துக்குமே ரொம்ப டேஸ்டா இருக்கும் சேர்த்து வைத்து சாப்பிடுவதற்கு. இந்தமாதிரி சேலம் ஸ்டைல நீங்களும் சிக்கன் சுக்கா ட்ரை பண்ணி வீட்ல எல்லாரும் கொடுத்துபாருங்க எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க இந்த சுவையான சிக்கன் சுக்காஎப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Selam Chicken Chukka
Yield: 4
Calories: 162kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ சிக்கன்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

மசாலாவிற்கு அரைக்க

  • 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
  • 6 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 கிராம்பு
  • 1 துண்டு பட்டை
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 3 ஸ்பூன் மிளகு

செய்முறை

  • சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸி ஜாரில் பட்டை,சோம்பு, தனியா விதைகள், மிளகு சேர்த்து அரைக்க வேண்டும்.
  •  
    பிறகு அதில் துருவிய தேங்காய்,சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  • பின்பு அடுப்பு ஒரு வாணலியில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.
  • பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து விட வேண்டும். பின் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
  • பின் தண்ணீர்சேர்க்காமல் சிக்கனில் இருக்கும் நீர் விட்டு நன்கு வேக விட வேண்டும். பிறகு இதில்அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
  • பின் சிக்கனை மூடி வைத்து சிக்கனை 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்றாகவெந்தவுடன் கிளறி விடவும் பிறகு தண்ணீர் சுத்தமாக சுண்டிய வரும்பொழுது அதில் கொத்தமல்லிதலைகளை தூவி இறக்கினால் ருசியான சேலம் சுக்கா வறுவல் தயார்.
  •  உங்களுக்கு வேண்டுமென்றால் தண்ணீர் சுண்ட விடாமல் சற்று கிரேவியாகவும் எடுத்து பரிமாறலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 162kcal | Carbohydrates: 16g | Protein: 7.7g | Cholesterol: 30mg | Sodium: 274mg | Potassium: 242mg