Advertisement
அசைவம்

ருசியான சேலம் சிக்கன் சுக்கா, அசத்தலான சுவையில் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Advertisement

சிக்கன்ல பல ரெசிபிஸ் இருக்கு இருந்தாலும் இந்த சிக்கன்ல நம்ம சுக்கா செய்து சாப்பிட போறோம். மட்டன் சுக்கா சாப்டு இருப்போம். இப்ப நம்ம சிக்கன்ல சிக்க்கா செய்ய போறோம். எல்லா உணவுப் பொருள்களையும் எல்லாவிதமான உணவையும் செய்ய ஆரம்பிச்சாசி. அதாவது சைவ உணவுகளை கூட அசைவ உணவு சுவையில் செய்ய ஆரம்பிச்சுட்டோம்.

சைவத்துல அசைவ உணவோடு சுவையை கொண்டு வரதுக்கு நிறைய பொருள்களும் வந்திருச்சு. அதே மாதிரி இப்போ மட்டன்ல மட்டும் செய்ற சுக்காவை சிக்கன்லையும் செய்து சாப்பிட போறோம். எல்லாமே ரொம்ப ருசியாவும் சுவையாகவும் இருக்கிறதுனால விதவிதமா உணவுகளை புதுசு புதுசா செய்றப்போ அது எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த சுவையான சிக்கன் சுக்கா சேலம் ஸ்டைலை எப்படி செய்வது என்று தெரிஞ்சிக்க இருக்கோம்.

Advertisement

பொதுவாக சிக்கன்ல 65, சுக்கா, வறுவல் இது மாதிரி செய்தா எல்லாருமே அதிகமா சாப்பிடுவாங்க. அதுலயும் இந்த மாதிரி சுக்கா எல்லாம் செய்து கொடுக்கும் போது ரொம்பவே பிடிக்கும். இந்த சிக்கன் சுக்கா எல்லா சாதத்துக்குமே ரொம்ப டேஸ்டா இருக்கும் சேர்த்து வைத்து சாப்பிடுவதற்கு. இந்த மாதிரி சேலம் ஸ்டைல நீங்களும் சிக்கன் சுக்கா ட்ரை பண்ணி வீட்ல எல்லாரும் கொடுத்து பாருங்க எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க இந்த சுவையான சிக்கன் சுக்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

சேலம் சிக்கன் சுக்கா | Selam Chicken Chukka Recipe In Tamil

Print Recipe
சுவையான சிக்கன்சுக்கா சேலம் ஸ்டைலை எப்படி செய்வது என்று தெரிஞ்சிக்க இருக்கோம். பொதுவாக சிக்கன்ல 65, சுக்கா, வறுவல் இது மாதிரி செய்தா எல்லாருமே அதிகமா சாப்பிடுவாங்க. அதுலயும் இந்தமாதிரி சுக்கா எல்லாம் செய்து கொடுக்கும் போது ரொம்பவே பிடிக்கும். இந்த சிக்கன் சுக்காஎல்லா
Advertisement
சாதத்துக்குமே ரொம்ப டேஸ்டா இருக்கும் சேர்த்து வைத்து சாப்பிடுவதற்கு. இந்தமாதிரி சேலம் ஸ்டைல நீங்களும் சிக்கன் சுக்கா ட்ரை பண்ணி வீட்ல எல்லாரும் கொடுத்துபாருங்க எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க இந்த சுவையான சிக்கன் சுக்காஎப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Selam Chicken Chukka
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 162
Advertisement

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கிலோ சிக்கன்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

மசாலாவிற்கு அரைக்க

  • 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
  • 6 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 கிராம்பு
  • 1 துண்டு பட்டை
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 3 ஸ்பூன் மிளகு

Instructions

  • சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸி ஜாரில் பட்டை,சோம்பு, தனியா விதைகள், மிளகு சேர்த்து அரைக்க வேண்டும்.
  •  
    பிறகு அதில் துருவிய தேங்காய்,சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  • பின்பு அடுப்பு ஒரு வாணலியில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.
  • பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து விட வேண்டும். பின் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
  • பின் தண்ணீர்சேர்க்காமல் சிக்கனில் இருக்கும் நீர் விட்டு நன்கு வேக விட வேண்டும். பிறகு இதில்அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
  • பின் சிக்கனை மூடி வைத்து சிக்கனை 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்றாகவெந்தவுடன் கிளறி விடவும் பிறகு தண்ணீர் சுத்தமாக சுண்டிய வரும்பொழுது அதில் கொத்தமல்லிதலைகளை தூவி இறக்கினால் ருசியான சேலம் சுக்கா வறுவல் தயார்.
  •  உங்களுக்கு வேண்டுமென்றால் தண்ணீர் சுண்ட விடாமல் சற்று கிரேவியாகவும் எடுத்து பரிமாறலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 162kcal | Carbohydrates: 16g | Protein: 7.7g | Cholesterol: 30mg | Sodium: 274mg | Potassium: 242mg
Advertisement
Prem Kumar

Recent Posts

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

7 நிமிடங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

1 மணி நேரம் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

5 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

14 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

15 மணி நேரங்கள் ago