ஆடி மாதம் சென்னையில் தரிசிக்க வேண்டிய டாப் 25 அம்மன் கோவில்கள்

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் ஆடி ச

By Prem Kumar · 1/8/2025

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்கள் மட்டுமல்ல எந்த நாளில் எல்லாம் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் அம்மனின் அருள் கிடைக்கும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட, அம்பிகையின் சக்தி அதிகரித்து காணப்படும். இந்த மாதத்தில் சிவ பெருமானே அம்பிகைக்குள் அடக்கம் என சொல்வார்கள்.

ஆடி மாதம், மழைக்காலத்தின் துவக்க மாதமாகும். அம்பிகை கருணையே வடிவானவள் என்பதால் தடையின்றி மழை பெறவும், நிலம், விவசாயம் செழிக்கவும் அம்பிகையிடம் வேண்டும் மாதம் என்பதால் இது அம்பிகை வழிபாட்டிற்கு உரிய மாதம் என்று சொல்லப்படுகிறது. சிவனுக்கும், சக்திக்கும் உரிய ஆடி மாதத்தில் சென்னையில் இருப்பவர்கள் சென்று வழிபட எளிதாக இங்கே சென்னையில் உள்ள புகழ்பெற்ற 25 கோவில்களின் பட்டியல்களை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

ஆடி மாத‌ விழா

ஆடி மாதம் வந்தாலே வரிசையாக விழாக்கள் வருவதை காணலாம். ஆடி பூரம், ஆடி பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, வரலட்சுமி விரதம். நவராத்திரி, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆடி வெள்ளியில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி வழிபாடு செய்து மக்களுக்கு கொடுக்கிறார்கள். நல்ல மழை வேண்டி, உடல் நலம் வேண்டி நம் முன்னோர்கள் அம்மனுக்கு வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கு பிடித்தமானவை வேம்பு, எலுமிச்சை, கூழ். இவை உடல் நலத்திற்கும், வியாதியை தடுப்பதற்கும் உதவுகின்றன.

ஆடி மாதத்தில் கிராமங்களில் மட்டுமல்லாமல், சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களிலும் மிக கோலாகலமாக அம்மனை வழிபடுகிறார்கள். சென்னையில் சாலையோரங்களில், தெருக்களில், புறநகர் பகுதிகளில் கணக்கில்லாத சிறியதும், பெரியதுமான அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. இவை அனைத்திலுமே ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த கோவில்களில் ஆடி மாதத்தில் சென்று வழிபடுவதும், அம்மனுக்கு அர்ச்சனைக்கு குங்குமம் வாங்கிக் கொடுப்பதும், கோவிலுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுப்பதும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.

சென்னையில் உள்ளவர்கள் தரிசிக்க வேண்டிய புகழ்பெற்ற 25 அம்மன் கோவில்கள்

1. கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோவில், மைலாப்பூர்

2.காமாட்சி அம்மன் திருக்கோவில், காஞ்சிபுரம்

3. காளிகாம்பாள் திருக்கோவில், பாரிமுனை

4. காமாட்சி அம்மன் திருக்கோவில், மாங்காடு

5. வடிவுடையம்மன் திருக்கோவில், திருவொற்றியூர்

6. பச்சை அம்மன் கோவில், திருமுல்லைவாயில்

7. கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு

8. அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசன்ட் நகர்

9. கங்கையம்மன் கோவில், செங்குன்றம்

10. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சிந்தாதிரிப்பேட்டை

11. வாராஹி அம்மன் கோவில், அம்பத்தூர்

12. ஆதி பராசக்தி திருக்கோவில், மேல்மருவத்தூர்

13. பிடாரி இளங்காளியம்மன் திருக்கோவில், சைதாப்பேட்டை

14. திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோவில், திரிசூலம்

15. மெட்ராஸ் காளி திருக்கோவில், பாரிமுனை

16. சர்வமங்கள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், நல்கநல்லூர்

17. கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், மண்ணடி

18. காமாட்சி அம்மன் கோவில், சைதாப்பேட்டை

19. முத்து மாரியம்மன் கோவில், சூளைமேடு

20. முண்டகக்கண்ணியம்மன் கோவில், மயிலாப்பூர்

21. பெரியபாளையம் பவானி அம்மன்

22. செல்லியம்மன் கோவில், அயனாவரம்

23. நாகாத்தம்மன் கோவில், திருவல்லிக்கேணி

24. கருமாரியம்மன் கோவில், சேத்துப்பட்டி

25. ரேணுகா பரமேஸ்வரி கோவில், தண்டையார்பேட்டை

இதனையும் படியுங்கள் : ஆடி மாதம் முடிவதற்குள் இந்த 1 பொருளை குலதெய்வ கோவிலுக்கு தானமாக கொடுத்து விடுங்கள்! வீட்டில் அதிசயங்கள் நடக்கும்!

Recipes AMP · Quick view
View full