கத்திரிக்காயை வைத்து இப்படி கூட குழம்பு சமைக்கலாமா? காலையில் தெரக்கல் குழம்பு செய்து விட்டால் மூன்று வேலைக்கும் குழம்பு பிரச்சனை இல்லை!

- Advertisement -

ஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு விதமான உணவுகளை சமைக்க தான் செய்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வித சுவைகளில் குழம்பு செய்யப்படுகிறது. அதிலும் கத்திரிக்காயில் செய்யப்படும் குழம்பு என்றால் அது மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் தமிழ்நாட்டில் செய்யப்படும் குழம்பு வகைகள் மிதமான காரத்துடன் இருக்கும்.

-விளம்பரம்-

அவ்வாறு செட்டிநாடுகளில் செய்யும் குழம்புகளில் எப்பொழுதும் மசாலா வாசனை அதிகமாகவே இருக்கும்.இவ்வாறு செய்யப்படும் குழம்பு மிகவும் அருமையான சுவையில் இருக்கும். எனவே தான் செட்டிநாடு சமையல் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கிறது. அவ்வாறு செட்டிநாடு ஸ்டைலில் ஒரு அருமையானதெரக்கல் கத்திரிக்காய் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

காலையில் அவசர அவசரமாக சமைக்கும்போது இந்த கத்திரிக்காய் தெரக்கல் குழம்பு செய்து விடுங்கள். காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். மதியம் சுடு சாதத்திற்கு இதை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மீதம் இருந்தால் ராத்திரி ஏதாவது டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரே ஒரு சைட் டிஷ் தான். ஆனால் நிறைவான டிஷ். ஆரோக்கியம் தரக்கூடிய அசத்தலான இந்த கத்திரிக்காய் தெரக்கல் குழம்பு ரெசிபி தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆர்வமாக இருக்குதா. வாங்க பார்க்கலாம்.

Print
4 from 2 votes

தெரக்கல் குழம்பு | Terakkal Kulambu Recipe In Tamil

செட்டிநாடு ஸ்டைலில் ஒரு அருமையானதெரக்கல்கத்திரிக்காய் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்ளப் போகின்றோம்.காலையில் அவசர அவசரமாக சமைக்கும்போது இந்தகத்திரிக்காய் தெரக்கல் குழம்பு செய்து விடுங்கள். காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி,பூரி இவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். மதியம் சுடு சாதத்திற்கு இதை போட்டு பிசைந்துசாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மீதம் இருந்தால் ராத்திரி ஏதாவது டிபனுக்கும்தொட்டுக் கொள்ளலாம். ஒரே ஒரு சைட் டிஷ் தான். ஆனால் நிறைவான டிஷ். ஆரோக்கியம் தரக்கூடியஅசத்தலான இந்த கத்திரிக்காய்  தெரக்கல் குழம்பு  ரெசிபி தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆர்வமாக இருக்குதா.வாங்க பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamilnadu
Keyword: Brinjal Therakkal Kulambu
Yield: 4
Calories: 125kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 கத்தரிக்காய்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்

தாளிக்க

  • எண்ணெய் சிறிது
  • சோம்பு சிறிது
  • மிளகு சிறிது
  • ப‌ட்டை சிறிது

அரைக்க

  • 4 பமிளகாய்
  • 6 கா மிளகாய்
  • 1 தே‌க்கர‌ண்டி சோம்பு
  • 1 தே‌க்கர‌ண்டி சீரகம்
  • 1/2 மூடி தேங்காய்
  • 3 முந்திரிப்பருப்பு
  • 2 தே‌க்கர‌ண்டி பொட்டுக்கடலை
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மூன்றையும் சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். தக்காளியை நறுக்கவும்.
  • அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை, ஒன்று ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  • ஒரு வாணலியைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிப்பவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
     
  • பிறகு,நறுக்கிய காய்கள், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின், அரைத்த விழுதையும் போட்டு, பச்சை வாசனை போகக் கிளறி, 4 அல்லது 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். சேர்ந்தாற்போல வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
  • செட்டிநாட்டு தெரக்கல் தயார்!!!

Nutrition

Serving: 500g | Calories: 125kcal | Carbohydrates: 4.8g | Protein: 9g | Cholesterol: 9mg | Fiber: 2g | Sugar: 0.5g | Calcium: 36.6mg | Iron: 1.3mg