Home ஆன்மிகம் தைப்பூசம் அன்று முருகனுக்கு இருக்க வேண்டிய விரதம் மற்றும் அதனால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும்...

தைப்பூசம் அன்று முருகனுக்கு இருக்க வேண்டிய விரதம் மற்றும் அதனால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

பொதுவாக தை மாதம் என்பது கடவுளுக்கு மிகவும் உகந்த ஒரு மாதம் ஆக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிவரும் எனவே இது மிகச் சிறந்த ஒரு மாதமாகும். தைப்பூச தினத்தன்று தான் இந்த உலகம் தோன்றியது என ஒரு ஐதீகம் உள்ளது. இந்த தைப்பூச தினம் ஆனது வியாழக்கிழமை வருவதால் முருகனுக்கு மட்டுமில்லாமல் சிவனுக்கும் குரு பகவானுக்கும் உகந்த ஒரு நாளாகவும் உள்ளது.எனவே தைப்பூசத்தன்று நாம் விரதம் இருந்து முருகனிடம் என்ன கேட்டாலும் அது கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-

தைபூசம் எப்பொழுது வருகிறது

முருக பக்தர்கள் தைப்பூசத்திற்காக 48 நாட்கள் விரதம் இருந்து அந்த முருகனை தரிசிப்பார்கள். தை ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகைக்கு அடுத்தபடியாக அனைவரும் எதிர்பார்ப்பது தைப்பூசத்திற்காகத்தான். முருகப்பெருமானுக்கு உகந்த தினங்கள் நிறைய இருந்தாலும் தைப்பூசமானது மிகவும் சிறந்த ஒரு நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம் வருவதால் அதிலும் வியாழக்கிழமை வருவதால் குரு பகவானுக்கு உகந்த நாளாகவும் உள்ளதால் இந்த வருட தைப்பூசம் மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

ஜனவரி 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளதால் 25ம் தேதியே தைப்பூசம் ஆக கொண்டாடப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் பூசம் நட்சத்திரம் வருவதால் 25 ஆம் தேதி விசேஷமாக முருகனுக்கு உகந்த தைப்பூசம் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஜனவரி 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதியும் வருகிறது‌. எனவே இது இன்னும் கூடுதல் சிறப்பாக உள்ளது.

தைப்பூசம் அன்று கடைபிடிக்க வேண்டிய விரத முறை

ஜனவரி 25ஆம் தேதி காலையிலிருந்து மாலை வரியில் பூசம் நட்சத்திரம் அதாவது தைப்பூசம் இருப்பதால் அன்று காலை முதல் மாலை வரை பால் மற்றும் பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டு அந்த முருகப்பெருமான நினைத்து உபவாசம் இருந்தால் நாம் நினைத்ததெல்லாம் நடக்கும். அதோடு காலை மாலை என இரு வேலைகளிலும் முருகன் கோவிலுக்கு சென்ற முருகனை தரிசித்து வருவது இன்னும் சிறப்பானது. தைப்பூச தன்று முருகனை மட்டுமில்லாமல் முருகப்பெருமானின் வேலையும் சேர்த்து தரிசித்தால் நாம் நினைத்ததெல்லாம் முருகனிடம் வேண்டியதெல்லாம் கிடைக்கும்.

முருகப்பெருமானின் அன்னையான பார்வதி தேவி முருகப்பெருமானுக்கு வேலை வழங்கிய நாள் தைப்பூசம் தான் எனவே நம் முருகப்பெருமானோடு சேர்த்த வேலையும் வணங்குவது மிகவும் நல்லது. அந்த ஞானவேலை கொண்டே முருகப் பெருமான் அசுரர்களை வதம் செய்தார். எனவே நாம் முருகப் பெருமானின் வேலை வணங்குவதால் தீய சக்திகள் நம்மை அண்டாது என சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-

ஒரு சில முருக பக்தர்கள் 48 நாட்கள் முருகனுக்கு விரதம் இருப்பார்கள். அப்படி 48 நாட்கள் விரதம் இருக்க முடியவில்லை என்றால் தைப்பூசம் அன்று காலை முதல் நாளை வரை முருகனையும் முருகப்பெருமானின் வேலையும் நினைத்து விரதம் இருக்கலாம். அப்படி நாம் விரதம் இருப்பதால் தீய சக்திகள் நம்மை அண்டாமல் நம்மிடம் செல்வமும் உயரும் அதே சமயத்தில் நோய் நொடிகளும் நம்மை அண்டாது. தைப்பூச தினத்தன்று முருகனை மட்டுமில்லாமல் சிவபெருமானையும் குரு பகவானையும் வழிபடுவது இன்னும் கூடுதல் சிறப்பாகும்.