உங்கள் வீட்டில் துளசி செடி உள்ளது எனில் துளசி செடியை மறந்தும் இந்த இடங்களில் வச்சுடாதீங்க!
துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம், அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான்.எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம்
துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம், அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான்.
எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். லக்ஷ்மி தேவியின் அவதாரமாக நம்பப்படும் துளசி அதன் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம், சுத்திகரிப்பு பண்புகள் மற்றும் மருத்துவப் பயன்களுக்காக பல நூற்றாண்டுகளாக மக்களால் வழிபடப்படுகிறது. துளசி செடியை எப்படி பராமரிக்க வேண்டும் என விதிகள் இருப்பதை போல், எந்தெந்த இடங்களில் எல்லாம் வளர்க்கக் கூடாது என்றும் சில விதிகள் உள்ளன. இவற்றை பின்பற்றாவிட்டால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அதனால் துளசி செடியை எந்த இடங்களில் வைக்க கூடாது என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
துளசியின் மருத்துவ பலன்கள்
நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால்தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள். நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது. நாம் நினைப்பதுப் போல துளசி நோய் நிவாரணி மட்டுமல்ல. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.
துளசியின் ஆன்மீகப் பலன்கள்
இலைகளில் மிக மிக புனிதமானது என்று போற்றப்படும் துளசியில் கரியமால் துளசி, கருந்துளசி, கற்பூரத் துளசி, செந்துளசி, காட்டுத் துளசி, சிவ துளசி, நீலத்துளசி, பெருந்துளசி, நாய்துளசி என ஒன்பது வகைகள் உள்ளன. இந்த ஒன்பதுமே மருத்துவத்திலும் ஆன்மிகத்திலும் முக்கியத்தும் கொண்டவை. யாருடைய வீட்டில் துளசிசெடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன ஏற்படாது. துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்துப் பூஜை செய்ய வேண்டும். துளசி தளத்தால் திருமாலை அர்ச்சனை செய்து பூஜிப்பவருக்கு மறுபிறவி கிடையாது. துளசி செடி இருக்கும் இடத்தில் தெய்வீக தன்மை நிறைந்திருக்கும் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
துளசி வளர்ப்பதற்கான விதிமுறைகள்
துளசி என்பது ஒரு தாவரமாக மட்டும் அல்லாமல், அதனை மகாலக்ஷ்மியாகவும் நாம் வழிபடுகின்றோம். இது மருத்துவ குணம் நிறைந்த ஒரு தாவரம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. துளசியை நாம் கடவுளாக பார்ப்பதினால் அதற்கு குங்குமப் பொட்டு வைத்து, பூ வைத்து, கோலம் போட்டு, அலங்காரம் செய்து காலை மாலை இரண்டு வேளைகளிலும் அகல் விளக்கை ஏற்றி வைத்து வழிபடுவதன் மூலம் துளசி செடியானது என்றும் செழிப்புடன் நம் வீட்டில் வளரும். துளசி செடியை வளர்ப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. துளசி செடியை வைக்கக் கூடாத இடங்கள் என சில உள்ளன. அங்க துளசியை வைத்தால் வீட்டில் துரதிஷ்டம் ஏற்படும்.
துளசியை வைக்க கூடாத இடங்கள்
துளசியின் புனிதத்தன்மை காரணமாக, மக்கள் வணங்கப்படும் துளசி செடியை குளியலறை பக்கத்தில் வைக்க கூடாது. துளசியை குளியலறை அல்லது கழிப்பறைக்கு அருகில் வைப்பது துரதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது.
இந்து மதத்தின்படி, துளசியை ஒருபோதும் சமையலறைக்கு அருகில் வைக்கக்கூடாது, ஏனெனில் வெப்பம், புகை மற்றும் சமையல் நாற்றங்கள் அதன் புனித ஆற்றலை மாசுபடுத்துவதாக நம்பப்படுகிறது. இதனால் துளசியின் தெய்வீக தன்மை குறைந்து, வீட்டின் செல்வ நிலையையும் பாதித்து விடும்.
துளசியை ஒருபோதும் படிக்கட்டுகள் அல்லது தாழ்வான பகுதிகளில் வைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இது நேர்மறை ஆற்றல் ஓட்டத்தைத் தடுக்கிறது. இது வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் வருவதையும், செல்வ வளம், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் வளர்ச்சியையும் தடுக்கும்.
துளசிச் செடியை ஒருபோதும் படுக்கையறையில் வைக்கக்கூடாது, ஏனெனில் அதன் சக்திவாய்ந்த ஆன்மீக ஆற்றல் தூக்கம் மற்றும் தம்பதிகளின் நெருக்கத்தில் குறுக்கிடலாம், இது தம்பதிகளிடையே அமைதியின்மை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும்.
துளசிச் செடியை செருப்பு வைக்கும் இடம் அல்லது அழுக்குப் பகுதிகளுக்கு அருகில் வைக்கக்கூடாது. இது துளசியின் புனித தன்மையை குறைத்து விடும். இதனால் துளசி வளர்ப்பதற்கான பலன் கிடைக்காமல் போய் விடும்.
துளசி வாஸ்து டிப்ஸ்
திருமாலின் மார்பில் நீங்காது நின்றாடும் இந்தத் துளசியை ஞாயிறு, செவ்வாய், வெள்ளியில் பறிக்கவே கூடாது. சதுர்த்தி, அஷ்டமி, பவுர்ணமி, ஏகாதசி நாள்களிலும் துளசியைப் பறிக்கக் கூடாது. வாஸ்து சாஸ்திரப்படி, முறையான இடத்தில் துளசியை வளர்க்கா விட்டால் வீட்டில் துரதிஷ்டம், வாழ்வில் தடைகள் ஏற்படும். வாஸ்து படி, துளசி செடியை வைப்பதற்கு கிழக்கு திசையே உகந்த திசையாகும். இருப்பினும், அது சாத்தியமில்லை என்றால், நீங்கள் அதை பால்கனியில் அல்லது வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் ஜன்னல் அருகே வைக்கலாம்.
இதனையும் படியுங்கள் : மறந்தும் கூட துளசி செடிக்கு அருகில் வைக்க கூடாது பொருட்கள் ? அப்படி வைத்தால் நடக்கும் தெரியுமா ?