Home ஆன்மிகம் மறந்தும் கூட துளசி செடிக்கு அருகில் வைக்க கூடாது பொருட்கள் ? அப்படி வைத்தால் நடக்கும்...

மறந்தும் கூட துளசி செடிக்கு அருகில் வைக்க கூடாது பொருட்கள் ? அப்படி வைத்தால் நடக்கும் தெரியுமா ?

துளசி செடியை மகாலட்சுமியாக கருதி அனைவரும் இல்லத்தில் வைத்து வழிபட்டு வருகிறார்கள். துளசி செடி ஒரு ஆன்மீக செடியாகும். இது வெறும் ஆன்மீகம் மட்டுமல்ல மூலிகை மருத்துவ செடி ஆகவும் விளங்குகிறது. இதன் இலைகள் எதிர்மறை எண்ணங்களை ஈர்த்து இழுக்கும். எதிர்மறை எண்ணங்களை விரட்டி விடக் கூடிய ஆற்றல் கொண்டது. உடலில் உள்ள சளி பிரச்சினைகளை எல்லாம் நிவர்த்தி செய்வதற்கு இந்த துளசி இலைகள் பயன்படுகின்றன. அப்படிப்பட்ட துளசி செடியை லட்சுமி தேவி அவதாரமாக நினைத்து வீடுகளில் மாடம் அமைத்து தூபதீப ஆராதனைகள் காட்டி வழிபாடு நடத்தி வருவார்கள். அப்படிப்பட்ட துளசி செடிக்கு அருகில் எந்த பொருட்களை வைக்க வேண்டும் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை பார்க்க இருக்கிறோம். துளசி செடி மிகவும் மென்மையான ஒரு செடியாகும். செல்வ செழிப்பு, வீட்டில் மகிழ்ச்சி , ஆரோக்கியம் நிறைந்திருப்பதற்கு துளசி செடிகளை வீட்டில் வாஸ்து முறைப்படி வைத்து தூப தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்து வருவார்கள். இதன் மூலம் மகாலட்சுமி அருள் தன் இல்லத்தில் என்றும் நிறைந்து இருக்கும்.

-விளம்பரம்-

துளசி மகாலட்சுமியின் அம்சம்

துளசிக்கு திருமாலின் மார்பில் எப்பொழுதும் இடமிருந்து கொண்டே இருக்கும். பிருந்தை வம்சத்தில் பெண்ணாக பிறந்த துளசி கிருஷ்ணரின் அருளால் அவருக்கு மாலையாகும் பாக்கியத்தை பெற்று இருக்கிறார். ஆகையால் இவரை மகாலட்சுமி ஆக துதிக்கின்றோம். துளசி வழிபாடு நடைபெறும் இல்லங்களில் மகாலட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்கும். அப்படி ஸழிபாடு நடத்தும் துளசி செடிக்கு அருகில் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நாம் துளசி செடியை இறைவியாக பார்க்கும் பொழுது இறைவிக்கு என்ன மரியாதை செலுத்த வேண்டுமோ அதே மரியாதையை நாம் துளசி செடிக்கும் செலுத்த வேண்டும். துளசி செடி கண் திருஷ்டி எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றோடு நம் இல்லத்திற்கு வருபவர்களிடமிருந்து அந்த எண்ணத்தை விலக்கி வைப்பதற்கும் அந்த எண்ணங்களை தனபால் ஈர்த்துக் கொள்வதற்கும் உதவுகிறது. ஆகையால் துளசி செடியை வடகிழக்கு பக்கத்தில் சூரிய ஒளி படுமாறு அனைவரின் கண்களும் தென்படுமாறு வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. துளசி செடிகளை மாடம் அமைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

சிவன் விக்ரஹம்

துளசி செடி அருகில் சிவலிங்கத்தை வைப்பது சிவன் விக்ரஹத்தை வைத்தல் கூடாது. காரணம் முப்பிறவியில் துளசி பிருந்தா என்ற பெயருடன் ஜலந்தர் என்ற அரக்கனின் மனைவியாக இருந்திருக்கிறார். அப்பொழுது சிவன் அந்த அரக்கனின் கொடுமைகளை அடக்குவதற்கு சிவபெருமான் ஜலந்தரோடு போரிட்டு ஜலந்தரையும் வதம் செய்து இருக்கிறார். கணவன் வதம் செய்யப்பட்டதை அறிந்த பிருந்தா சிவனுக்கு சாபம் விடுகிறார். துளசி இலைகளால் சிவனை வழிபடக்கூடாது என்று ஆகவே சிவ லிங்கத்தினை துளசி செடிக்கு அருகில் வைத்தல் கூடாது.

விநாயகர் விக்ரஹம்

புராணங்களின் படி விநாயகர் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவரது அழகில் மயங்கி துளசி காதல் வயப்படுகிறார். அவரது விருப்பத்தை ஏற்க மறுக்கிறார் விநாயகர். அதனால் துளசி கோபம் கொண்டு விநாயகருக்கு அவர் விருப்பப்படி திருமணம் நடைபெறாது என்று சாபம் விடுகிறார். ஆகையால் துளசி செடி அருகில் விநாயகர் விக்ரகம் வைப்பது கிடையாது.

துடைப்பம் குப்பை தொட்டி

நாம் துளசி செடியை மகாலட்சுமி தேவி ஆக வழிபடுவதால் எப்பொழுதுமே இறைவன் அருகில் துடைப்பமோ குப்பை தொட்டிகளையும் நாம் வைப்பது கிடையாது. அதே போல் துளசி செடிக்கு அருகிலும் வீடு துடைக்கும் துடைப்பம், தரை துடைக்கும் மாப் மற்றும் குப்பைகளை கொட்டி வைக்கும் குப்பை தொட்டிகளை துளசி செடிக்கு அருகில் வைத்தல் கூடாது. அப்படி வைப்பது லட்சுமி தேவியை அருள் கிடைக்க விடாமல் செய்துவிட்டும்.

-விளம்பரம்-

காலனிகள்

வீட்டின் வாசல்புறத்தில் துளசி செடிகளை வைத்து வழிபாடு செய்து கொண்டிருக்கிறோம் என்றால் வெளியில் இருந்து உள்ளே வரும் பொழுது காலணிகளை கழட்டி விடுவதற்கு என்று தனி இடம் இருக்கும். ஆனால் நாம் மறந்து விட்டு காலணிகளை துளசி செடிக்கு அருகில் கழட்டி விட்டுவிடுவோம். அப்படி செய்தலும் தவறான செயலாகும். துளசியை சாதாரண செடி என்று நினைப்பதில்லை மகாலட்சுமி அம்சமாக இருப்பதால் தேவிக்கு உரிய சகல மரியாதையும் கொடுக்க வேண்டும். ஆகையால் துளசி செடிக்கு அருகில் காலணிகளை கழட்டி விடுவது போன்றவற்றை செய்தல் கூடாது.

நாம் நம்பிக்கையோடு ஒரு வழிபாடு செய்கிறோம் என்றால் அதில் முழுமையான மனதோடு ஈடுபட வேண்டும். அலட்சியம் செய்தல் கூடாது. முழு மனதாக வழிபடும் போது அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.