கனவில் சிவபெருமான் வந்தால் அதற்கான காரணம் தெரியுமா ? அதனால் நமக்கு கிடைக்கப் போகும் பலன்கள் என்னென்ன?

- Advertisement -

பொதுவாக நாம் அனைவரும் தூங்கும் பொழுது நமக்கு கனவு வரும். அந்த கனவுகள் ஒரு சில நேரம் நமக்கு ஞாபகத்திலும் இருக்கும் ஒரு சில நேரத்தில் நாம் மறந்தும் விடுவோம். அதில் சில கனவுகள் நமக்கு மிகவும் பிடித்திருக்கும் சில கனவுகள் நமக்கு பயத்தை ஏற்படுத்தி நம் தூக்கத்தையும் கிடைக்கும். நாமும் இந்த கனவின் அர்த்தம் என்ன என்பதை பற்றி பலமுறை யோசித்து இருப்போம்.

-விளம்பரம்-

அந்த வகையில் நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு என்று பெரியவர்கள் சொல்வார்கள். பொதுவாக கனவு என்பது இறந்த காலம் மற்றும் எதிர்காலத்தில் நடந்தவைகளையும் நடக்கப் போவதையும் பற்றி நமக்கு வரும் என்று நிபுணர்கள் சொல்வார்கள். அந்த வகையில் நம் கனவில் சிவபெருமான் வந்தால் அதற்கு அர்த்தம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

- Advertisement -

சூலாயுதம்

நம் கனவில் சிவபெருமானின் சூலாயுதத்தை கண்டால் அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. நமக்கு பிற்காலத்தில் வரப் போகின்ற பிரச்சனைகள் கஷ்டங்கள் என அனைத்தும் நீங்கிவிடும் என்பதை நமக்கு உணர்த்துவதற்காக சிவபெருமானின் திரிசூலம் நம் கனவில் வரும் என்று சொல்வார்கள்

சிவலிங்கம்

நம்முடைய கனவில் சிவலிங்கம் பார்ப்பது மிகவும் நல்லது. சொல்லப்போனால் சிவலிங்கத்தை கனவில் பார்ப்பது புண்ணியமாக பார்க்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் நமக்கு செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரப்போகிறது என்று அர்த்தம்‌.

மாம்பழம்

நம் கனவில் மாம்பழங்கள் நிறைய இருக்கின்ற மரங்களை கண்டால் அது சிவபெருமானை குறிக்கும். பிற்காலத்தில் நமக்கு பணவரவு அதிகரித்து நம்முடைய பொருளாதார நிலை மாறும் என்பதை பற்றி குறிக்கிறது. நாம் வாழ்க்கையில் முன்னேற போவதற்கான ஒரு அர்த்தமாகவும் பார்க்கப்படுகிறது

-விளம்பரம்-

சிவன் பார்வதி

நம் கனவில் சிவபெருமானையும் பார்வை தேவியையும் சேர்த்துக் கண்டால் அர்த்தநாரீஸ்வரரின் அருள் நமக்கு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். திருமண வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் பிரச்சனைகள் சங்கடங்கள் என அனைத்தும் தீர போகிறது என்று அர்த்தம். பார்வதி தேவியாருக்கு நீர் அபிஷேகம் செய்வது இன்னும் நல்ல பலன்களை கொடுக்கும். பிறகு சிவன் கோவிலுக்கு சென்று தேன் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் திருமண வாழ்க்கைக்கு மிகவும் நல்லது.