ஏப்ரல் மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர்கள்!!

ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது சுபமாகவும் அமையும், அசுபமாகவும் இருக்கும். அது அந்தந்த ராசிகளை பொறுத்து அமையும். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்குகிறார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லு

By ·

ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது சுபமாகவும் அமையும், அசுபமாகவும் இருக்கும். அது அந்தந்த ராசிகளை பொறுத்து அமையும். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்குகிறார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும்பொழுது தமிழ் மாதம் பிறப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சூரிய பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இன்னும் சில தினங்களில் மேஷ ராசிக்கு மாறப் போகிறார். சூரியன் தற்போது ஒரு வருடம் கழித்து மேஷ ராசிக்குள் நுழையப் போகிறார், வரும் ஏப்ரல் 14, 2025 இந்த பெயர்ச்சி நடக்கப் போகிறது. கிரகங்களுக்கு தலைவனாகவும், முதல் கிரகமாகவும் அறியப்படுவது சூரியன் பகவான். எனவே இந்த மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் என்றே சொல்லலாம். அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியில் தான் சூரியன் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். லாபகரமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முயற்சி தொடங்க நல்ல யோகம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். புதிய கார், பைக், வீடு, நிலம் வாங்கும் யோகம் தேடி வரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சியால் நன்மை உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். நிதி ஆதாயம் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் புதிய பரிமாணத்தை காணலாம். முதலீடு செய்ய நல்ல நேரமாகும். இந்த சமயத்தில் என்ன முதலீடு செய்தாலும் இரட்டிப்பு லாபத்தை பெறலாம். அலுவலகத்தில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகைக்கும். சிலருக்கு புதிய வீடு, புதிய கார் அல்லது நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு, சூரியப் பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். பதவி உயர்வு கிடைக்கலாம். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். தலைமைத்துவ பண்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிலுவையில் உள்ள பணிகள் விரிவடையும். திடீர் பண வரவு கிடைக்கும். சண்டை, சச்சரவு முடிவுக்கு வரும். தந்தையின் சொத்தில் இருந்து லாபம் கிடைக்கலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சியால் நன்மை நடக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். பெரிய சாதனைகளை புரியலாம். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி பதவி உயர்வு கிடைக்கும். மொத்தத்தில் சூரியனின் பெயர்ச்சியால் உங்கள் வேலையில் புதிதாக ஜொலிக்கவுள்ளீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். கணவன் மனைவி உறவுகள் இனிமையாக இருக்கும். தொழில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் பகவான் ஆவார், இதனால் இந்த பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். சனியால் கஷ்டப்படும் இவர்களுக்கு சூரிய பகவான் சற்று நிம்மதியை அளிப்பார். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அனைத்து துறைகளிலும் லாபம் கிடைக்கும். எதிரிகள் உங்களிடம் தோற்று விலகும் நிலை வரும். வெற்றி மீது வெற்றிகள் குவியும்.

இதனையும் படியுங்கள் : புதன் பெயர்ச்சி பலன்கள் 2025!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை