மேஷம்

புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பண வரவு அதிகமாகும். உங்கள் பணியிடத்தில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியைப் பெறுவீர்கள். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும்.புதன் சஞ்சாரம் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கல்வியுடன் தொடர்புடையவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
ரிஷபம்

வணிகம் தொடர்பான உங்கள் நிதி நெருக்கடி தீர்க்கப்படும். இருப்பினும் முதலீடுகளில் கவனமாக இருப்பது நல்லது. மூத்தவர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே முக்கிய முடிவுகளை எடுக்கவும். மாணவர்களுக்கு படிப்பு, போட்டிகளில் எதிர்பார்த்த சிறப்பான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு, வேலை கிடைக்கும். வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு செல்ல சாதக பலன் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
மிதுனம்

புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். உடல்நலத்தில் கவனமாக இருங்கள். புதன் பெயர்ச்சி காலத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான சூநிலைகள் இருக்கும். நிதி நிலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரின் ஆதரவு இருக்கும். குழந்தைகளால் நன்மைகள் ஏற்படும். பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன், உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ கலந்து பேசிவிட்டு எடுப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
கடகம்

புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் சில பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம். உங்கள் பிரச்சினைகளுக்கு மற்றவர்களைக் காரணம் என்று கருதுவதைத் தவிர்க்கவும். கவனம் செலுத்துவதில் குறைபாடு இருக்கும். கணவன் – மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார், உறவினர்கள் நண்பர்களிடம் சுமுகமான உறவு தொடரும். உடல் உபாதைகள் நீங்கும். எதிர்பாராத புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
சிம்மம்

பணியிடத்திலும் தொழிலிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். மனம் எதையாவது நினைத்துக் கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த கவலைகள் இப்போது நீங்கும். சிம்ம ராசி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஆன்மீக காரியங்கள் நடைபெறும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
கன்னி

பணியிடம் மற்றும் தொழிலில் புதிய திட்டங்களில் வேலை செய்யத் தொடங்க வேண்டாம். இந்த புதன் சஞ்சாரத்தால், வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்த திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சகோதரரின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். முக்கியமான விஷயங்களில், அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே முடிவுகளை எடுக்கவும். லாபத்திற்கான பல வாய்ப்புகளும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
துலாம்

உங்கள் பணியிடம் மற்றும் தொழிலில் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகிறார். இந்தப் பயணத்தால் உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த நேரத்தில் புதிய திட்டங்களில் வேலை செய்யத் தொடங்க வேண்டாம். செய்யும் வேலைகளில் தடைகள் ஏற்படலாம். வாகனத்தைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் சாதக பலன்கள் கிடைக்கும்.
விருச்சிகம்

புதன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதமனான பலன்களை அளிக்கும். பணியிடம் மற்றும் தொழிலில் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழிலிலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். அரசு துறையில் நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பல நாட்களாக தொடர்ந்த கடனை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.
தனுசு

சமூகத்தில் தனுசு ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செலவுகளைக் குறைப்பது அவசியம். உடல்நலம் நன்றாக இருக்கும். தொழிலில் புதிய திசையில் கவனம் செலுத்துங்கள். கட்டிடம், வாகனம் போன்றவற்றால் இன்பம் பெறலாம். அலுவலக பணிகளில் உள்ளவர்கள் பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் கிடைக்கும்.
மகரம்

புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் வீட்டில் சுப நிகழ்ழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாகும். குடும்பத்தினருடன் இணக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆபத்துக்களை எடுப்பதைத் தவிர்க்கவும். பிள்ளைகளைப் படிப்பின் பொருட்டுக் கசக்கிப் பிழியவேண்டாம். அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். வீட்டிலும், பணியிடத்திலும் சாதகமான சூழ்நிலையும், பெரிய சாதனைகளைப் படைக்க வாய்ப்புகளும் உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உணவு எடுத்துக்கொள்ளும் விஷயத்தில் கவனம் தேவை.
கும்பம்

கும்ப ராசியில் 11 ஆவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போவதால் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு அமோகமான ஆண்டாக இருக்கும். முதலீடுகள் மற்றும் சேமிப்புகளால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்க்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். முதலீடுகள் மற்றும் சேமிப்புகளால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.
மீனம்

புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் மீன ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனுடன் முந்தைய சில வேலைகளும் நிறைவடையும். குடும்பத்தோடு வெளியே சென்று வருவீர்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடின உழைப்பால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களால் யோகத்தைப் பெறுவீர்கள். தொழில் விஷயங்களில் எதிர்பார்த்ததை விட சிறப்பான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக இருக்கக்கூடிய பிரச்னைகள் தீரும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் பண மழையில் நனையும் ராசிகள்


