திணை சீரக தோசை காலை டிபனுக்கு இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை வைத்து ஒரு திணை சீரக தோசை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.  புதுவிதமான இந்த திணை சீரக தோசை நாவிற்கு சுவையையும் தரும். உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். உடல் எடையை சீராக வைத்து, உடலுக்குத் தேவையான சத்தை கொடுக்கும்.

-விளம்பரம்-

அரிசி சேர்க்க போவது கிடையாது. இந்த அடையை செய்ய திணை மற்றும் சீரகம் சேர்த்து செய்யப் போவதால் இரட்டிப்பு ஆரோக்கியம் நமக்கு கிடைக்கப் போகின்றது. மிக மிக சுலபமான முறையில் ஆரோக்கியம் தரும் இந்த தோசை ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க.  ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த திணை சீரக தோசை வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் செய்து சாப்பிட வேண்டும்.

- Advertisement -
Print
5 from 1 vote

திணை சீரக தோசை | Thinai Jeera Dosa Recipe In Tamil

புதுவிதமான இந்த திணை சீரக தோசை நாவிற்கு சுவையையும்தரும். உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். உடல் எடையை சீராக வைத்து, உடலுக்குத் தேவையானசத்தை கொடுக்கும். அரிசி சேர்க்க போவது கிடையாது. இந்த தோசை யை செய்ய திணை மற்றும் சீரகம் சேர்த்து செய்யப் போவதால் இரட்டிப்பு ஆரோக்கியம்நமக்கு கிடைக்கப் போகின்றது. மிக மிக சுலபமான முறையில் ஆரோக்கியம் தரும் இந்த தோசைரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க.  ஆரோக்கியத்தின்மீது அக்கறை உள்ளவர்கள் இந்த திணை சீரக தோசை வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் செய்து சாப்பிடவேண்டும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Thinai Jeera Dosai
Yield: 4
Calories: 150kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் திணை
  • 1/4 கப் அரிசி மாவு
  • 1 கப் தயிர்
  • 2 கப் தண்ணீர்
  • 1 மேசைக்கரண்டி மிளகு தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 வெங்காயம்

தாளிக்க

  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 மிளகாய் வற்றல்

செய்முறை

  • இஞ்சி,வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  • திணை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்
  • ஒரு அகண்ட பாத்திரத்தில் பொடி பண்ணிய திணை ரவா, அரிசி மாவு, தயிர், தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும். வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்
  • கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன், மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும்
  •  
    கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்
  • தோசைக் கல்லைஅடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.
  • சத்தான டிபன் திணை சீரக தோசை ரெடி

செய்முறை குறிப்புகள்

இதற்கு தொட்டு கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்

Nutrition

Serving: 50g | Calories: 150kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Fat: 0.1g | Sodium: 13mg | Potassium: 274mg | Fiber: 6g