காலை டிபனுக்கு சூப்பரான தினை பால் பொங்கல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியமான மற்றும் விசேஷமான ஒரு திருநாள். இதை உழவர் திருநாள் என்றும் அழைப்பார்கள். பொங்கல் பண்டிகை அன்று அனைவரது இல்லங்களிலும் குடும்பத்தாரோடு சேர்ந்து சர்க்கரை பொங்கலை செய்து உண்டு மகிழ்வது வழக்கம். பொங்கல் என்றாலே ஞாபகத்திற்கு வருவது சர்க்கரை பொங்க

By Prem Kumar · 11/2/2024

பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியமான மற்றும் விசேஷமான ஒரு திருநாள். இதை உழவர் திருநாள் என்றும் அழைப்பார்கள். பொங்கல் பண்டிகை அன்று அனைவரது இல்லங்களிலும் குடும்பத்தாரோடு சேர்ந்து சர்க்கரை பொங்கலை செய்து உண்டு மகிழ்வது வழக்கம். பொங்கல் என்றாலே ஞாபகத்திற்கு வருவது சர்க்கரை பொங்கல் தான். இந்த பொங்கலை இரண்டு வகையில் செய்வார்கள். ஒன்று பால் பொங்கல் மற்றொன்று சர்க்கரை பொங்கல். பொங்கல் தினத்தன்று வேறு என்னனென்ன விசேஷமான உணவுகளை சமைத்தாலும் இந்த பொங்கல் தானே அன்றைய ஸ்பெஷல் உணவு. பொங்கல் செய்யலாம் என்றாலே நம் நினைவில் வருது பச்சரிசி, மண்டவெல்லம் தான் ஆனால் சற்று வித்தியாசமாக ஆரோக்கியம் அதிகம் உள்ள தினை அரிசி பொங்கலை இங்கு நாம் செய்வோம். பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது.

தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. உங்கள் நாளை ஒரு இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் தினை பொங்கல் செய்யுங்கள். இது ஒரு ஆரோக்கியமான உணவும் கூட. சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த தினை பொங்கல் உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்கச் செய்கிறது. வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து செய்வதால் அதன் சுவை இந்த பொங்கலை ஒரு ஸ்பெஷலான உணவாக மாற்றுகிறது. இது வெறும் உணவை சமைக்கும் தினமாக இல்லாமல் உழவர்கள் நன்றி செலுத்தும் விதமாகவும் சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் கொண்டாடப்படும் ஒரு அற்புதமான பண்டிகை. இப்போது இந்த பண்டிகையின் முக்கிய உணவான பொங்கலை தினை அரிசியில் நம் பாரம்பரியமான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : பொங்கல் திருநாளில் மஞ்சள் பூசணிக்காயை இப்படி ஒரு முறை புளிப்பும், இனிப்புமாக செட்டிநாடு ஸ்டைலில் புளிக்காய் செய்து பாருங்கள், சப்பு கொட்டி சாப்பிடுவீங்க!

Recipes AMP · Quick view
View full