பொங்கல் திருநாளில் மஞ்சள் பூசணிக்காயை இப்படி ஒரு முறை புளிப்பும், இனிப்புமாக செட்டிநாடு ஸ்டைலில் புளிக்காய் செய்து பாருங்கள், சப்பு கொட்டி சாப்பிடுவீங்க!

- Advertisement -

வெண்பூசணியை விட மஞ்சள் பூசணி ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த மஞ்சள் பூசணிக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்து வருவதால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் முற்றிலுமாக குணமடையும். மஞ்சள் பூசணிகாயை சமைத்து சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள பெக்டின் என்னும் வேதிபொருள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.

-விளம்பரம்-

மஞ்சள் பூசணி ஜூஸ் செய்து அல்லது சமைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த சுவையான பரங்கிக்காய் புளிக்காய் செட்டிநாடு ஸ்டைலில் நீங்களும் ஈசியாக எப்படி செய்வது? என்பதைத் தான் இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

- Advertisement -
Print
5 from 1 vote

மஞ்சள் பூசணி புளிக்காய் | Pumpkin pulikaai Recipe In Tamil

வெண்பூசணியை விட மஞ்சள் பூசணி ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த மஞ்சள் பூசணிக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்து வருவதால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் முற்றிலுமாக குணமடையும். மஞ்சள் பூசணிகாயை சமைத்து சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள பெக்டின் என்னும் வேதிபொருள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Yellow Pumpkin Pulikai
Yield: 4
Calories: 85kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 டேபிள்ஸ்பூன் சமையல் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் வெந்தயம்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • 1 கப் பரங்கிக்காய் துண்டுகள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் புளித் தண்ணீர்
  • 1 கப் தண்ணீர்
  • 1 கப் வெல்லம்

செய்முறை

  •  
    பரங்கிக்காய் புளிக்காய் செய்முறை விளக்கம்: பரங்கிக்காய் தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு வருமாறு நறுக்கினால் போதும்.
  • பின் மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள்.
  • அதில் கொஞ்சம் போல் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நான்கு காய்ந்த மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர் தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வர வதங்க வேண்டும்.ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேருங்கள்.
  • இதனுடன் பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்றை சேர்த்து மசிய வதக்க விடுங்கள். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்குங்கள். வெங்காயம், தக்காளி ஓரளவுக்கு மசிய வதங்கி வரும் பொழுது நறுக்கி வைத்துள்ள பரங்கிக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள்.
  • நன்கு வதக்கிய பின்பு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். குழம்பு மிளகாய் தூள் சேர்த்தாலும் சரி, மசாலா வாசம் போக நன்கு கலந்து விட்ட பின்பு ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு புளி தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இது பரங்கிக்காய்க்கு நல்ல ஒரு புளிப்புச் சுவையை கொடுக்கும். பின்னர் ஒரு கப் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள், சீக்கிரம் பரங்கிக்காய் வெந்துவிடும். இப்போது பாத்திரத்தை மூடி வைத்து வேக வையுங்கள்.
  • 7 லிருந்து 8 நிமிடத்திற்குள் பரங்கிக்காய்கள் நன்கு வந்து விடும். இடையிடையே மூடியை திறந்து கலந்து விடுங்கள். இல்லையில் அடி பிடிக்க வாய்ப்புகள் உண்டு.
  •  ஏழு நிமிடத்திற்கு பிறகு நன்கு தண்ணீர் எல்லாம் வற்றி திரண்டு வந்தவுடன் ஒரு கப் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து கலந்து விடுங்கள். வெல்லம் கரைந்து எல்லாவற்றுடனும் கலந்து கெட்டியாக தொக்கு போல வர வேண்டும்.
  • இந்த சூப்பரான செட்டிநாடு பரங்கிக்காய் புளிக்காய் பல ஊர்களில் பிரசித்திபெற்றதாக இருக்கிறது. நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்திடுங்க!

Nutrition

Serving: 100g | Calories: 85kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Calcium: 3.1mg | Iron: 0.26mg