தினை புதினா புலாவ்

பொதுவாக புலாவ் என்றால் அரிசியில் செய்யும் புலாவ் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அது ஒரு பக்கம் இருக்க, இந்த சத்தான தினை புலாவ் எத்தனை பேருக்கு தெரியும். சிறுதானியங்களை பற்றி பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இது அனைவரும் அறிந்த சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. கம்பு, கேழ

By Prem Kumar · 7/4/2024

பொதுவாக புலாவ் என்றால் அரிசியில் செய்யும் புலாவ் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அது ஒரு பக்கம் இருக்க, இந்த சத்தான தினை புலாவ் எத்தனை பேருக்கு தெரியும். சிறுதானியங்களை பற்றி பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இது அனைவரும் அறிந்த சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, சோளம் போன்ற பல தானியங்கள் கிடைக்கிறது. சிறுதானியங்களை பலவிதங்களில் நாம் சேர்த்துக் கொள்ளலாம். சிறுதானிய இட்லி மற்றும் தோசை, சிறுதானிய பணியாரம், சிறுதானியக் கஞ்சி, ஆகியவை மிகவும் பிரபலம். சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

சத்தான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள் உட்கொள்ள வேண்டும். சிறுதானியங்களை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்ப்பர். சுவையாக இருக்காது என்பர். ஆனால் அவற்றை அவர்களுக்கு பிடித்த விதத்தில் செய்து கொடுத்தால் சாப்பிடுவர். சிறுதானியங்களில் பல்வேறு வகையான ருசியான ரெசிபிகள் செய்யலாம். அந்தவவையில் சிறுதானியங்களில் ஒன்றான தினை அரிசியில் புதினா புலாவ் செய்வது குறித்து பார்ப்போம். தினையில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்திருக்கிறது.

திணையில் வளமான புரதம் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வாயு, கபத்தைப் போக்கும். எலும்புகள் நன்றாக உறுதியாகும். இதயத்தை பலப்படுத்தும். இந்த தினை புலாவ் சுகர் பேஷண்ட்ஸ் மற்றும் உடல் எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த புலாவ் செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும். இந்த புலாவை மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : பாரம்பரிய சுவையில் தினைப் பணியாரம் மாலை நேர ஸ்நாக்ஸாக இப்படி ட்ரை செய்து பாருங்களேன்!

Recipes AMP · Quick view
View full