பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி சிறுதானியம் பற்றி கூறும் போது தினைப் பற்றி கூறாதவர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் சிறு பிள்ளைகளுக்கு கொடுக்க சொல்லும் போது கட்டாயமாக தினைப் கொடுக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள். இதற்கு காரணம் தினை அரிசியில் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது..
உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து இருக்கும். ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் குழந்தைகள் பெரியவர்களுக்கு பிடித்தமாக தினை உணவினை அதிகமாக செய்வது இல்லை. சிறுதானியங்கள் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும்.
சிறு தானியங்களில் செய்யும் உணவுகளை பலரும் விருப்பமாக சாப்பிடுவது கிடையாது. ஆகவே அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் உணவுகளை சமைத்துக் கொடுத்தால், இந்த சிறுதானிய உணவையே அவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்தி விடலாம். அவ்வாறு அனைவருக்கும் பிடித்த சுவையில் ஆரோக்கியமான சிறுதானியமான தினையை கொண்டு சுவையான தினைப் பணியாரம் செய்து சுவைத்து மகிழுங்கள்.
தினைப் பணியாரம் | Thinai Paniyaaram Recipe In Tamil
Equipment
- 1 குழி பணியாரகல்
தேவையான பொருட்கள்
- 3/4 டம்ளர் தினையரிசி
- 1/4 டம்ளர் பச்சரிசி
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1 வாழைப்பழம்
- 1 வெல்லம் தேவையான அளவு
- நெய் தேவையானஅளவு
- சோடா உப்பு சிறிது
செய்முறை
- தினையரிசி,பச்சரிசி இரண்டையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு அவற்றோடு தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.அரைத்து எடுத்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க விடவும்.
- மாவு புளித்ததும் அதில் வாழைப்பழம், வெல்லம், சோடா உப்பு சேர்த்து பிசையவும்.குழிப்பணியாரக்கல்லில் சிறிது நெய் விட்டு மாவை ஊற்றவும்.
- சிறிதளவு நெய் போதுமானது.வெந்ததும் திருப்பி விட்டு மேலும் சிறிது நேரம் வேக விட்டு எடுத்து விடவும்.
- சுவையான தினைப் பணியாரம் ரெடி