Advertisement
ஆன்மிகம்

தப்பித்தவறி கூட சனிக்கிழமையில் வாங்க கூடாத 5 பொருட்கள் என்னென்ன தெரியுமா ?

Advertisement

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவையாகும். இந்து மதத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதே போல் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நவகிரகத்திற்கு உரிய நாளாகவும் கருதப்படுகிறது. சனிக்கிழமை சனி பகவானுக்குரிய நாள் என்பதால் இதை மங்கல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாள் கிடையாது என மக்கள் ஒதுக்குகிறார்கள்.

சாத்திர சம்பிரதாயங்களில் சொல்லி வைத்திருக்கும் சில விஷயங்களை, நமக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அதை நாம் பின்பற்றுவது நல்லது. நாம் செய்யும் விஷயங்களுக்கு ஏற்ற நல்ல, கெட்ட விஷயங்களை கொடுப்பவர் சனி பகவான். ஒருவருக்கு அவரவர் கர்மவினைக்கேற்ப பலன்களைத் தருகிறது. சனி பகவானை மகிழ்விப்பது மிகவும் முக்கியம். சனிக்கிழமைகளில் சில பொருட்களை வாங்கினால் சனி பகவானுக்கு கோபம் வந்துவிடும்.

Advertisement

ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம் தருவதாக அமையும். அதே போல ஒவ்வொரு பொருட்களையும் குறிப்பிட்ட கிழமைகளில் வாங்கும் பொழுது சில சமயங்களில் துரதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அந்த வகையில் சனிக்கிழமையில் எந்த பொருட்களை வாங்கக் கூடாது என பார்க்கலாம்.

உப்பு

உப்பு மகாலட்சுமிக்கு உரிய பொருளாகும். கல் உப்பை வெள்ளிக்கிழமையில் வாங்குவது மிகவும் சிறப்பானதாகும். ஆனால் சனிக்கிழமையில் உப்பு வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நஷ்டங்களை சந்திக்க நேரிடும். இதன் மூலம்‌ பொருளாதார நிலமை படிப்படியாக கீழ் நோக்கி செல்லும். சமையலறையில் உப்பு தேவைப்பட்டாலும் சனிக்கிழமை உப்பு வாங்கக்கூடாது. உப்பை எப்பொழுதும் சனிக்கிழமையில் வாங்காதீர்கள்.

கருப்பு எள்

சனிக்கிழமைகளில் கருப்பு எள் வாங்கினால் வீட்டில் நிகழும் நல்ல காரியங்களில் தடைகள் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் அனைத்தும் தள்ளி போகும். சனிக்கிழமைகளில் கருப்பு எள் வாங்கினால், அது வாழ்வில் பல தடைகள், சிரமங்கள் மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ள வைக்கும்.

Advertisement

காலணிகள்

சனிக்கிழமைகளில் கருப்பு நிறப் பொருட்களை வாங்கக்கூடாது. கருப்பு நிற‌ காலணிகள் வாங்கி சனிக்கிழமையில் முதன்முறை அணிந்தால் வாழ்வில் தொடர்ந்து தோல்விகள் ஏற்படும். காலணி, பேக் போன்ற தோல் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது.

கத்தரிக்கோல்

கத்தரிக்கோல் போன்ற பொருட்களை சனிக்கிழமைகளில்

Advertisement
வாங்கக்கூடாது. இது குடும்பத்தில் உள்ளவர்களின் உறவுகள் மற்றும் ஒற்றுமையை பாதிக்கும். இதனை சனிக்கிழமைகளில் வாங்குவது அபசகுணமாக கருதப்படுகிறது. அதனால் இதனை கடனாக வாங்கவும் கூடாது, கடனாக கொடுக்கவும் கூடாது.

இரும்பு பொருட்கள்

இரும்பு பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது. அதாவது கத்தரிக்கோல், கத்தி, அறிவாள்மனை போன்ற பொருட்களை வாங்க கூடாது. அதேபோல் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களையும் சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது. இரும்பு, சனி பகவானுக்குரிய பொருளாகும். அதனால் சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை வாங்கினால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம். மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் சனிக்கிழமைகளில் வாங்காமல் இருந்தாலே போதும் கடன்‌ வாங்குவதிலிருந்து விடுபடலாம்.

இதனையும் படியுங்கள் : செவ்வாய்க்கிழமையில் இதை மட்டும் செய்யுங்கள் போதும் உங்களுக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் தீரும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

7 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

7 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

7 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

9 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

10 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

10 மணி நேரங்கள் ago