Advertisement
ஆன்மிகம்

மறந்தும் கூட இந்த பொருட்களை சமையலறை மேடையில் வைத்து பயன் படுத்தாதீர்கள்..!

Advertisement

நம் வீட்டில் பூஜை அருகே நாம் எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அதே போல் பூஜை அறைக்கு நிகரான சமையல் அறையையும் எப்பொழுதுமே சுத்தமாக துடைத்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் நமக்கு அன்னலட்சுமியின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைத்து எப்பொழுதுமே நமக்கு அன்னம் கிடைக்கும். யார் ஒருவருடைய வீட்டின் சமையலறை சுத்தமாக இருக்கிறதோ அவர்களுக்கு எந்த பண கஷ்டங்களும் வராது என சொல்லப்படுகிறது. பொதுவாக ஒரு வீட்டில் சமையலறை தென்கிழக்கு திசையில் இருந்தால் அந்த வீட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மிகவும் நல்லது. நாம் வீட்டில் சமையல் அருகில் அனைத்து மசாலா பொருட்களையும் நமக்கு தகுந்தமான ஒரு இடத்தில் வைத்திருப்போம். நம் கைகளுக்கு எட்டும் படி சில பொருட்களையும் தேவை இல்லாத பொருட்களை ஒரு இடத்திலும் வைத்திருப்போம். ஆனால் நம் வீட்டில் சமையல் அறையில் எந்தெந்த பொருட்களை எங்கு எங்கு வைக்க வேண்டும் எந்தெந்த பொருட்களை ஒரு சில இடங்களில் வைக்க கூடாது என்பதற்கு ஒரு சில விதிமுறைகள் உள்ளது. இதனை பின்பற்றினால் நம் வீட்டில் பணக்கஷ்டங்கள் தீர்ந்து வருமானம் அதிகரிக்கும். அந்த வகையில் நம் வீட்டில் சமையல் அறை மேடையில் வைக்க கூடாத சில பொருட்களையும் வைக்க வேண்டிய சில பொருட்களையும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் சமையலறை மேடையில் வைக்க வேண்டிய சில பொருட்கள்

எப்பொழுதுமே ஒரு செம்பில் முழுவதுமாக தண்ணீர் நிரம்பி இருக்கும் படி ஒரு செம்பு தண்ணீரை சமையலறை மேடையின் வலது பக்கத்தில் வைத்திருக்க வேண்டும். அப்படி வைக்கும் பொழுது தண்ணீர் எப்படி நிரம்பி இருக்கிறதோ அதேபோல் நம் மனதும் வயிறும் நிரம்பி இருக்கும்.

Advertisement

பசு நெய்யை சமையலறை மேடையில் வலது பக்கமாக வைக்க வேண்டும்.

கல் உப்பை வீட்டில்

Advertisement
சமையலறை மேடையில் வலது பக்கமாக வைப்பது நல்லது கல் உப்பை எப்பொழுதும் சமையலறை மேடையில் கீழே வைக்கக்கூடாது ஏனென்றால் கல் உப்பும் நெய்யும் லட்சுமி கடாட்சம் பொருந்தியது.

மேற்குறிப்பிட்ட மகாலட்சுமியின் அம்சம் நிறைந்த அனைத்து பொருட்களையும் வீட்டில் சமையல் அறை மேடையில் வலது பக்கமாக வைத்தால் லட்சுமி கடாட்சம் வீட்டில் உண்டாகும்.

வீட்டில் சமையல் அறை மேடையில் வைக்க கூடாத சில பொருட்கள்
Advertisement

எப்பொழுதுமே கூர்மையான ஆயுதங்களான கத்திரிக்கோல் கத்தி அரிவாள்மனை போன்றவற்றை சமையலறை மேடையில் வலது பக்கமாக வைக்கக் கூடாது சமையலறை மேடையில் கீழ் பக்கமாக தான் இதனை வைக்க வேண்டும்.

காய்ந்த அசைவ பொருட்களை சமையலறை மேடையில் வலது பக்கம் ஒருபோதும் வைக்க கூடாது உதாரணமாக காய்ந்த இறால் கருவாடு போன்றவற்றை வைக்கக் கூடாது.

வீட்டிற்கு அசைவம் வாங்கி வந்த உடன் அதனை சமையலறை மேடையில் வலது புறமாக வைக்கக் கூடாது.

கருப்பு உளுந்து கருப்பு எள் போன்றவற்றை சமையலறை மேடையின் வலது பக்கமாக வைக்கவே கூடாது.

சனிபகவானின் ஆதிக்கம் நிறைந்த பொருளான எண்ணெய் பொருட்களை சமையலறை மேடையில் வலது பக்கமாக வைக்கக் கூடாது குறிப்பாக நல்லெண்ணையை ஒருபோதும் வைக்க கூடாது.

இதனையும் படியுங்கள் : சமையலறையில் இந்த பொருட்கள் எல்லாம் இருந்தால் மகாலட்சுமி மகிழ்ச்சி அடைந்து வீட்டில் பணம் சேருமாம்!

Advertisement
Prem Kumar

Recent Posts

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

2 மணி நேரங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

2 மணி நேரங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

2 மணி நேரங்கள் ago

சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 09 மே 2024!

மேஷம் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும்…

6 மணி நேரங்கள் ago

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

15 மணி நேரங்கள் ago