வெள்ளிக்கிழமை அன்று மறந்தும் செய்யக்கூடாத சில விஷயங்கள்
ஒரு வாரத்தில் உள்ள ஏழு கிழமைகளில் மிகவும் மங்களகரமானது என்றால் அது வெள்ளிக்கிழமை தான். வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தேவிக்கு மிகவும் உகந்த நாளாகும். மகாலட்சுமி தேவியின் முழு அருளையும் பெறுவதற்கு வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பான நாட்கள் எனவே அந்த நாளன்று நாம் ஏதாவது ஒரு காரியத்தை
ஒரு வாரத்தில் உள்ள ஏழு கிழமைகளில் மிகவும் மங்களகரமானது என்றால் அது வெள்ளிக்கிழமை தான். வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தேவிக்கு மிகவும் உகந்த நாளாகும். மகாலட்சுமி தேவியின் முழு அருளையும் பெறுவதற்கு வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பான நாட்கள் எனவே அந்த நாளன்று நாம் ஏதாவது ஒரு காரியத்தை புதிதாக தொடங்கினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் மகாலட்சுமி தேவியின் முழு அருளையும் பெறுவதற்கு வெள்ளிக்கிழமை என்று வீட்டை சுத்தமாகவும் பூஜை அறையை சுத்தமாகவும் வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. வெள்ளிக்கிழமை அன்று செல்வம் செழிப்பதற்கும் கடன் பிரச்சினைகள் நீங்குவதற்கும் ஒரு குறிப்பிட்ட விஷயங்களை செய்ய வேண்டும் அதேபோல் வெள்ளிக்கிழமை என்று மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது மீறி செய்தால் கடன் பிரச்சினைகள் வீட்டில் சண்டைகள் வீட்டில் ஏதாவது ஒரு பொருளை இழத்தல் போன்ற பலவிதமான பிரச்சனைகள் நமக்கு ஏற்படும்.
வெள்ளிக்கிழமை
தெய்வத்தை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளான வெள்ளிக்கிழமை இன்று ஆன்மீக ரீதியாக ஒரு சில செயல்களை நாம் செய்யலாம் என்றும் செய்யக்கூடாது என்றும் இருக்கிறது அந்த வகையில் மகாலட்சுமி தேவியின் மனம் குளிர்ந்து அவளுடைய அருள் முழுவதுமாக நமக்கு கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும் அதேபோல் மகாலட்சுமி தேவியாரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கு ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது எனவே வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய விஷயங்களை பற்றியும் செய்யக்கூடாதவைகளை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை
வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள தெய்வங்களுக்கு பசும்பாலை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுத்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
பணத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவியை 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து பூஜை செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் லட்சுமி ஆக இருக்கக்கூடிய பசுவிற்கு உணவு அளிப்பது மிகவும் சிறந்தது அதனால் உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் எப்பொழுதும் மாலையில் வீட்டை சுத்தம் செய்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் அழிந்து நல்ல சக்திகள் குடியேறும்.
வெள்ளிக்கிழமை அன்று அரச மரத்தடி பிள்ளையாருக்கு 11 தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் பண வரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று குபேர விதத்தில் தாமரை திரி போட்டு விளக்கு ஏற்றி வந்தால் குபேரனுடைய முழுமையான அருள் நமக்கு கிடைக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் முருகன் சுக்கிரன் லட்சுமி ஆகிய மூன்று பேரின் அருளையும் ஒருசேர பெறுவதற்கு விரதம் இருந்து வழிபட்டு வரலாம்.
மகாலட்சுமி தேவிக்கு அம்சமாக விளங்கக்கூடிய கல்லுப்பை வெள்ளிக்கிழமை என்று நம் வீட்டில் வாங்கி வைப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சமும் செல்வமும் இரண்டு மடங்காக கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று செய்யக்கூடாதவை
ஆண்கள் வெள்ளிக்கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கவே கூடாது பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்துக் கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமைகளில் முடி வெட்டுவது சவரம் செய்வது நகம் வெட்டுவது போன்ற விஷயங்களை கண்டிப்பாக செய்யவே கூடாது.
வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்யக்கூடாது அதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை வீட்டில் பூஜை அறை வீடு என அனைத்தையும் சுத்தம் செய்த வைக்க வேண்டும்.
பூஜைக்கு தேவையான விளக்கு மணி போன்றவற்றை வெள்ளிக்கிழமைகளில் கழுவக்கூடாது முந்தைய நாளை அனைத்து பூஜை பொருட்களையும் சுத்தம் செய்வது மிகவும் நல்லது.
மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களான உப்பு தயிர் பருப்பு ஊசி போன்றவற்றை கடனாக வாங்குவோம் கடன் கொடுக்கவும் கூடாது.
வெள்ளிக்கிழமை அன்று பழைய துணிகளை நம்முடையதாக இருந்தாலும் மற்றவர்களுடையதாக இருந்தாலும் தைக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் நிறைய அழுக்கு துணிகளை சேர்த்து வைத்திருந்தால் வீட்டில் கடன் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை பெண்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழற்றி மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டை இருளாக வைக்க கூடாது பிரகாசமாக வைத்திருக்க வேண்டும்.
இதனையும் படியுங்கள் : செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும்!