Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும்!

செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும்!

பொதுவாக ஒரு வாரத்தில் இருக்கின்ற ஏழு நாட்களுக்கும் ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமைக்கு பலவிதமான சிறப்புகள் உண்டு என்று சொல்லலாம். என்னதான் நிறைய சிறப்புகள் இருந்தாலும் செவ்வாய்க்கிழமை என்று ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அதேபோல் இந்த விஷயத்தை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை என்று நாம் என்ன விஷயங்கள் செய்தால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் செவ்வாய்க்கிழமை அன்று செய்யக்கூடாதவைகளை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டியவைகள்

செவ்வாய் கிழமை அன்று சிவப்பு மற்றும் காப்பர் நிறத்தால் ஆன உடைகளை அணிந்தால் கடன் பிரச்சினைகள் தீர்ந்து போகும் மேலும் திருமண தடைகளும் நீங்கும்.

செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள் எனவே அன்று முருகப் பெருமானுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் நாம் கேட்ட வரங்கள் அனைத்தும் கிடைக்கும்.

பொதுவாக செவ்வாய்க்கிழமையும் சனிக்கிழமையும் அனுமனுக்கு உகந்த நாட்கள் எனவே அனுமன் வழிபாடு செவ்வாய்க்கிழமை செய்வதால் மிகவும் நல்லது. அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று பசு நெய் தீபம் அல்லது கடுகு தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.

செவ்வாய்க்கிழமை இன்று கடன் வாங்குவதும் கடன் கொடுப்பதும் கூடாது.

-விளம்பரம்-

செவ்வாய்க்கிழமை அன்று எண்ணையை தானமாக கொடுக்கலாம் மேலும் மண்ணால் ஆன பொருட்களான அகல் விளக்கு போன்றவைகளை தானமாக கொடுக்கலாம். கோதுமை வெள்ளம் காப்பர் பொருட்கள் பச்சை பயிறு போன்றவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.

செவ்வாய்க்கிழமை அன்று வீட்டிற்கு கல்கண்டு கடலை போன்றவைகளை வாங்கி வருவது நல்லது.

செவ்வாய்க்கிழமை அன்று அனுமன் வழிபாடு செய்யும்போது ஆரஞ்சு நிறத்தால் ஆன லட்டுவை பிரசாதமாக கொடுக்கலாம்.

-விளம்பரம்-

செவ்வாய்க்கிழமை அன்று பூமி தேவனை வழிபட்டு சொந்தமாக நிலமாக வேண்டும் வீடு வாங்க வேண்டும் என்று வழிபாடு செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை அன்று செய்யக்கூடாதவைகள்

செவ்வாய்க்கிழமை என்று முடி வெட்டக்கூடாது மேலும் தாடியையும் ஷேவ் செய்யக்கூடாது. நகத்தையும் வெட்டக்கூடாது.

செவ்வாய்க்கிழமை என்று உளுந்தம் பருப்பை வைத்து செய்யக்கூடிய எந்த ஒரு உணவுகளையும் செய்யக்கூடாது.

செவ்வாய்க்கிழமை முக்கியமாக கருப்பு நிற உடைகளை அணியக் கூடாது சிவப்பு நிற உடைகளை தான் அணிய வேண்டும்.

செவ்வாய்க்கிழமை அனுமனுக்கு உகந்த நாள் என்பதால் பூமி புத்திரன் ஆன அனுமனுக்கு உகந்த நாளான அன்று பூமியை தோண்ட கூடாது.

செவ்வாய்க்கிழமை என்று எந்த ஒரு வாக்குவாதத்திலும் யாருடனும் ஈடுபடக்கூடாது முக்கியமாக உடன் பிறந்தவர்களுடன் ஈடுபடவே கூடாது.

செவ்வாய்க்கிழமை வாங்க கூடாத பொருட்கள்

செவ்வாய்க்கிழமை என்று மேக்கப் பொருட்களை வாங்க கூடாது. மற்றவர்களுக்காகவும் ஏன் நமக்காக கூடவும் வாங்க கூடாது. வெள்ளிக்கிழமை அன்று இந்த மேக்கப் பொருட்களை வாங்குவது சிறந்தது.

இரும்பாலான பொருட்களையும் செவ்வாய்க்கிழமைகளில் வாங்க கூடாது. நகத்தை வெட்ட கூடிய நகை வெட்டியையும் செவ்வாய்க்கிழமை அன்று வாங்க கூடாது.

இதனையும் படியுங்கள் : விளக்கு ஏற்றும் போது செய்யக்கூடாதவைகள்