ஈசானிய மூலையில் செய்ய வேண்டிய வழிபாடு!
பொதுவாக ஒரு சிலர் பலவிதமான பிரச்சனைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள் அந்த மாதிரி இயங்குபவர்கள் வாஸ்து ரீதியாக நம்முடைய வீட்டில் ஒரு தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். அந்த தீப வெளிச்சமானது கஷ்டங்களில் இருந்து
பொதுவாக ஒரு சிலர் பலவிதமான பிரச்சனைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள் அந்த மாதிரி இயங்குபவர்கள் வாஸ்து ரீதியாக நம்முடைய வீட்டில் ஒரு தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். அந்த தீப வெளிச்சமானது கஷ்டங்களில் இருந்து நம்மை வெளிக்கொண்டுவரும் அந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
தீப வழிபாடு
வாஸ்து ரீதியாக ஒவ்வொருவருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய ஒவ்வொரு மூலைக்கும் ஒரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் இருக்கும். அதன் அடிப்படையில் தான் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளும் இருக்கும் உதாரணமாக வீட்டினுடைய அக்னி மூலையில் சமையலறை இருக்க வேண்டும் தென்மேற்கு மூலையில் பீரோ வைத்திருக்க வேண்டும் இப்படி ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு விதமான அறைகள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த வீட்டில் வாஸ்து ரீதியாக எந்த பிரச்சினையும் வராது. அதற்கு இந்த எளிமையான தீப வழிபாட்டை நாம் செய்ய வேண்டும்.
கோமாதா
இந்த வழிபாட்டிற்கு நமக்கு கோமாதா சிலை மிகவும் அவசியம் கன்றுடன் இருக்கக்கூடிய கோமாதாவின் சிலையை வாங்கி சுத்தம் செய்வதற்கு சந்தன குங்குமம் பொட்டு வைக்க வேண்டும் இந்த சிலையை நம் வீட்டில் உள்ள வடகிழக்கு மூலையில் அதாவது ஈசானிய மூலையில் வைக்க வேண்டும் மேலும் ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து அதில் நம்முடைய வேண்டுதல்களை எழுதி சுருட்டி சிவப்பு நிற நூலால் கட்ட வேண்டும். அந்த பேப்பரை கோமாதா மற்றும் கன்றுக்கு நடுவில் வைத்து தினமும் கோமாதாவிற்கு முன்பாக தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
தீபம் ஏற்ற வேண்டிய கால அளவு
இதனை தொடர்ச்சியாக 41 நாட்கள் செய்ய வேண்டும் 42 வது நாள் நம் எழுதி வைத்துள்ள சீட்டை எடுத்து நம் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலமரம் அரசமரம் வேப்பமரம் ஏதாவது ஒன்றை கட்டி தொங்க விட வேண்டும் தீபம் ஏற்றி முடிக்கக்கூடிய நாள் அன்று நமக்கு வேண்டியது கிடைக்கும். முழு நம்பிக்கையோடு முழு மனதோடு இந்த வழிபாட்டை செய்தால் அனைத்து தெய்வங்களுடைய அருளையும் பரிபூரணமாக பெறலாம்.
இதனையும் படியுங்கள் : உங்கள் வீட்டின் வறுமை நீங்குவதற்கே வடகிழக்கு மூலையில் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!