பொதுவாக வாஸ்து பார்க்கும் பழக்கத்தை காலங்காலமாக மக்கள் பின்ற்றி வருகின்றார்கள். வாஸ்து பார்ப்பதினால் நிறைய பலன் கிடைக்கும் என்பது முன்னோர்களின் கருத்து. வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் சில வகை செயல்களை செய்தாலே நம் வீட்டில் செல்வம் பெருகும். அமைதி நிலவும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணம் ஆனது நம் வாழ்வில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். குபேரர் செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமாக கருதப்படுகிறார். அவர் புகழ் மற்றும் தங்கத்தை பிரதி நிதித்துவப்படுத்துகிறார். இவரை வடகிழக்கு திசை குபேரனால் நிர்வகிக்கப்படுகிறார். இந்த திசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
வாஸ்துப்படி, வீட்டின் வடக்கு திசையில் ஒரு சில பொருட்களை வைப்பதன் மூலம், அந்த வீட்டில் செல்வம் பெருகும். வாஸ்து பார்த்து ஒரு சிறு மாற்றத்தை செய்வதன் மூலம் கூட பெரும் பலனை பெறலாம். ஏனெனில் சிறு சிறு மாற்றங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்து, வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்குகிறது. நமது வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருளையும் வாஸ்துப்படி வைக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வீட்டில் நிதி செழிப்பு மற்றும் பண வரவைக் கொண்டு வர, சில முக்கியமான வாஸ்து குறிப்புகள் பற்றி பார்ப்போம்.

செல்வ வளம் பெருக
வடகிழக்கு மூலை வீட்டிற்கு மிகவும் மங்களகரமான இடமாக கருதப்படுகிறது. இந்த குறிப்பிட்ட மூலை ஆன்மீக மற்றும் மத அம்சங்களை சித்தரிக்கிறது. பூஜை அறை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடம் வடகிழக்கு பகுதியாகும். இந்த அறையில் காற்றோட்டம் இறக்கிற வகையிலும், நன்றாக சூரிய ஒளி வருகிற மாதிரியும் பார்த்துக்கொண்டால் வீட்டில் செல்வ வளம் மிகவும் அதிகரிக்கும். வடகிழக்கு மூலையில் நீர்வீழ்ச்சி, தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் அல்லது படங்கள் மாட்டி வைத்தால் வீட்டில் செல்வ நிலை தானாகவே உயரும் என நம்பப்படுகிறது.
தொழிலில் அதிகமாக லாபம் பெற வேண்டும் என்றால், நீங்கள் தொழில் செய்யும் இடத்திலோ அல்லது வடகிழக்கு மூலையில் உள்ள ஜன்னலில் துளசி அல்லது புதினா செடியை வளர்க்கலாம். வடகிழக்கு மூலையில் கண்ணாடிகளை வைக்கலாம் அல்லது கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம். இதனால் நாம் இருக்கும் இடம் வாசனையாக இருப்பதோடு மட்டுமின்றி வறுமை நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

தொழில் வளர்ச்சி பெற
ஈஷான மூலை அல்லது கடவுள் மூலை என்றும் அழைக்கப்படும் வடகிழக்கு மூலைக்கு வாஸ்துவில் சிறப்பு முன்னுரிமை உண்டு. ஆனால் தொழில் செய்யும் இடத்தில் ஈசான்ய மூலையில் கடவுள் படங்களையோ அல்லது விக்ரகத்தையோ வைத்து வழிபடக் கூடாது. அலுவலகத்தை முற்றிலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மற்றும் பொருட்களை அதிகம் பரப்பி வைக்க கூடாது. வடகிழக்கு மூலையில் மூங்கில் செடி அல்லது புதினா போன்றவற்றை வைக்கலாம். இது மனதில் ஒருவித நேர்மறை சிந்தனை மற்றும் தொழிலில் வெற்றியை கொடுக்கும்.
வடகிழக்கு மூலையில் வைக்கக் கூடாதவை
வடகிழக்கு மூலை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் பராமரிக்கப்பட வேண்டும். தேவையற்ற பொருட்கள் எதுவும் அந்த மூலையில் வைக்கக் கூடாது. வீட்டின் வடகிழக்கு மூலையில் சமையலறை இருந்தால் அது வாஸ்து தோஷமாக கருதப்படுகிறது. குடும்ப தலைவன், தலைவி படுத்து உறங்கும் அறை, குளியலறை, சமையல் அறை, பொருட்கள் சேமிக்கும் அறை, மூலை படிக்கட்டு, கழிவுநீர் தொட்டி, மேல்நிலை தண்ணீர் தொட்டி போன்றவை வடகிழக்கு மூலையில் வைக்க கூடாது.
இதனையும் படியுங்கள் : வாஸ்து படி இதை மட்டும் இதை மட்டும் செய்யுங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!


