பணம் வசியம் ஏற்பட புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை
அனைவருமே பணம் சம்பாதிப்பதற்காக தான் இந்த உலகில் பலவிதமான கஷ்டங்களை தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பணம் நம் வீட்டில் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியும் நம்முடன் இருக்கும் ஆனால் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற பண வரவு ஏற்படாமல் நிறைய பேர் கஷ்டப்படுவதுண்டு அப்படி கஷ்டப்பட்
அனைவருமே பணம் சம்பாதிப்பதற்காக தான் இந்த உலகில் பலவிதமான கஷ்டங்களை தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பணம் நம் வீட்டில் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியும் நம்முடன் இருக்கும் ஆனால் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற பண வரவு ஏற்படாமல் நிறைய பேர் கஷ்டப்படுவதுண்டு அப்படி கஷ்டப்பட்டு உழைத்தும் பணத்தை சம்பாதித்தும் பணம் நம்மிடம் நிரந்தரமாக தங்காமல் போய்விடுகிறது என்றால் அதற்கு பணவசியம் இல்லை என்று அர்த்தம் பண வசியத்தை ஏற்படுத்தவும் பணவரவை அதிகரிக்கவும் புரட்டாசி முதல் நாள் என்று பெருமாள் கோவிலுக்கு சென்ற வழிபாடு செய்ய வேண்டிய முறைகள் பற்றி பார்க்கலாம்.
புரட்டாசி மாதம்
பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். ஒரு சிலர் புரட்டாசி மாதத்தில் அசைவம் உண்ணாமல் பெருமாளை நினைத்து விரதம் இருப்பார்கள். சனிக்கிழமை அன்று கலவை சாதங்களை பெருமாளுக்கு படைத்த வழிபாடு செய்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் கொடுப்பது போன்ற வழிபாடுகளையும் ஒரு சிலர் செய்வார்கள். சனிக்கிழமை என்று பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது மிகவும் நல்லது ஒரு சிலர் திருப்பதிக்கு கூட சென்று பெருமாளை வழிபாடு செய்வார்கள். புரட்டாசி மாதத்தின் முதல் நாள் அன்று பெருமாளை வழிபாடு செய்யும் முறைகளை பற்றி பார்க்கலாம்.
துளசி மாலை
சனிக்கிழமை அல்லது புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் அப்பொழுது பெருமாளுக்கு மலர்கள் துளசி மாலை போன்றவற்றை கொடுத்து வழிபாடு செய்யலாம். துளசி மாலை பெருமாளுக்கு சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. இன்று புரட்டாசி மாதத்தின் முதல் நாள் பௌர்ணமியோடு சேர்ந்து வருவதால் பெருமாளுக்கு துளசி மாலையை வாங்கிக் கொண்டு போய் கொடுத்து வழிபட்டு விட்டு அங்கு கொடுக்கும் துளசி இலைகளை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பணம் சேர செய்ய வேண்டிய வழிபாடு
அந்த பிரசாதம் ஆக கொடுத்த துளசி இலைகளை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து விட்டு பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துவிட்டால் பணத்தின் மீது இருக்கக்கூடிய திருஷ்டிகள் தோஷங்கள் நீங்கி பணத்தடை விலகி பண வரவு அதிகரிக்கும் பண வசியமும் கிடைக்கும். நியாயமான முறையில் உழைப்பவர்களுக்கு அதற்கு ஏற்ற பணம் தேடி வந்து கொண்டு தான் இருக்கும் செல்வாதிபதியாக விளங்க கூடிய பெருமாளுக்கு புரட்டாசி முதல் நாள் என்று இந்த வழிபாட்டை செய்வதால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும் மன நிறைவும் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் மற்றும் செல்வ வளங்கள் அதிகரிக்க நாம் சமையல் அறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்!