மன உளைச்சல் நீங்கி நிம்மதியாக வாழ செய்ய வேண்டியவை!
இன்றைய காலகட்டத்தில் பணக்காரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி அனைவருக்குமே மன நிம்மதி சுத்தமாக இருப்பதில்லை. நிம்மதியாக யார் ஒருவர் தூங்குகிறாரோ அவர்தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த பணக்காரர் என்று கூட பலர் கூற கேட்டிருப்போம் வருமானம் இருந்தாலும் வருமானம் இல்லை என்றாலும்
இன்றைய காலகட்டத்தில் பணக்காரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி அனைவருக்குமே மன நிம்மதி சுத்தமாக இருப்பதில்லை. நிம்மதியாக யார் ஒருவர் தூங்குகிறாரோ அவர்தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த பணக்காரர் என்று கூட பலர் கூற கேட்டிருப்போம் வருமானம் இருந்தாலும் வருமானம் இல்லை என்றாலும் மனதிற்குள் ஏதாவது ஒரு குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கும் அதற்கு காரணம் பல வகையில் இருந்து வரும் எனவே உங்களுடைய வீட்டு பூஜை அறையில் ஒரு எளிமையான வழிபாட்டை செய்வதன் மூலம் மன நிம்மதியோடு வாழ முடியும். மன நிம்மதியை இழந்து வாடுபவர்கள் எளிமையான வழிபாட்டை மேற்கொண்டு வரலாம்
தெய்வ வழிபாடு
நமக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்குமே நமக்கு இருக்கக்கூடிய தீர்வு தெய்வத்தை நம்பி சரணடைவது மட்டும்தான். கோவிலுக்கு சென்று நம்முடைய குறைகளை எல்லாம் கூறினால் நம்மிடம் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும் அதனால் தான் தெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது அப்படிப்பட்ட தெய்வ வழிபாட்டை நாம் சில முறைகளை கடைப்பிடித்து செய்தால் நம்முடைய மன உளைச்சல் நீங்கி வாழ்க்கை நிம்மதியாக வாழ முடியும்.
மன உளைச்சல் நீங்கி நிம்மதியாக வாழ பரிகாரம்
ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதில் நல் சேர்த்து பரப்பிக் கொள்ளவும் அதில் இரண்டாக விளக்கு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊத்தி திரி போட்டு காலை மாலை என இருவேளைகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இந்த நெல்லை மாற்றினால் போதுமானது பயன்படுத்திய நெல்லை எடுத்து பறவைகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
காலையில் கேட்க வேண்டிய பாடல்கள்
தினமும் காலையில் லலிதா சகஸ்ரநாமம் விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவற்றை கேட்கலாம். மாலை நேரத்தில் கந்த சஷ்டி கவசம் கேட்கலாம் தினமும் ஸ்ரீராம ஜெயம் எழுதி வர மன குழப்பங்கள் நீங்கும் வீட்டில் தீபம் ஏற்றும் போது எப்பொழுதுமே குலதெய்வத்திற்காக தனியாக ஒரு தீபத்தை ஏற்க வேண்டும் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் சேர்த்து வழிபட்டால் நமக்கு அதற்கான பலன்கள் பல மடங்கு கிடைக்கும். நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : வருமானம் அதிகரிக்க சம்பள பணம் வந்தவுடன் செய்ய வேண்டியவை