அனைவரும் பணத்தை சம்பாதிக்க மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து பாடுபடுகிறோம் ஆனால் அந்த பணம் ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்காக பயன்பட்டால் மனதிற்கு நிம்மதியாக இருக்கும் ஆனால் பணம் வீண்விரயம் ஆகிக்கொண்டே இருந்தால் மனதிற்கு மிகவும் வேதனையாக வருத்தமாகவும் இருக்கும் எனவே சம்பளம் வந்தவுடன் அதை ஒரு சில நல்ல காரியங்களுக்காக செலவு செய்தால் அந்த பணம் அதிகரிக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதன்படி ஒருமுறை மாத சம்பளம் வாங்குபவர்கள் வார சம்பளம் வாங்குபவர்கள் என அனைவருமே அவர்களுடைய முதல் வருமானத்தை இந்த முறையில் பயன்படுத்தினால் வருமானம் அதிகரித்து பணம் வீண்விரயமாகாமல் இருக்கும். அதற்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சம்பளம் வாங்கிய உடன் செய்ய வேண்டிய சில செலவுகள்
வருமானம் உங்கள் கையில் வந்தவுடன் முதலில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி விட்டு மனதார வழிபட வேண்டும் இப்படி செய்தால் பணம் வீண் விரயமாகாமல் பணத்தை சேமிக்க முடியும்.
பசு மாட்டிற்கு சாப்பிட ஏதாவது கீரை பழங்கள் போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெண்ணையை தானமாக வாங்கி கொடுக்கலாம் அதனை செய்ய முடியாதவர்கள் வெற்றிலை மாலையை தொடுத்து ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபடலாம்.

சம்பளம் வாங்கியவுடன் மல்லிகை பூவை வாங்கி அதனை ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு கொடுத்தால் வருமானம் பல மடங்கு உயரும்.
சம்பள பணத்தில் முதல் பணத்தை ஏதாவது ஒரு ஏழை குழந்தையின் படிப்பு செலவிற்காக கொடுத்து உதவி செய்யலாம் உங்களால் என்ன முடியுமோ ஒரு சிறிய பேனாவாக இருந்தால் கூட அதனை வாங்கி கொடுத்து ஏழை குழந்தைகளுக்கு உதவினால் வீட்டில் எப்பொழுதுமே லட்சுமி கடாட்சம் இருந்து கொண்டே இருக்கும்.
முதலில் கைகளில் வாங்கிய சம்பளம் இப்பொழுது வங்கி கணக்கில் தான் இருக்கும் எனவே அந்த பணத்தை எடுத்து தங்களுடைய கைகளால் மேற்கண்ட செலவுகளை மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் செய்தால் பணம் நிச்சயமாக வீண் விரயம் ஆகாமல் பணத்தை சேமிக்க முடியும்.
முழு நம்பிக்கையோடு வருமானத்தை அதிகரிக்க இந்த செயல் முறையை ஒவ்வொரு மாதமும் செய்து வந்தால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : சம்பளப் பணம் வந்தவுடன் இப்படி செலவு செய்தால் பணம் கையில் தங்குவதோடு வருமானமும் அதிகரிக்கும்!!



