வருமானம் அதிகரிக்க வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்கள்!!

ஒரு சிலர் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற உரிய பலன்கள் கிடைக்காது அதற்கு காரணம் வீட்டில் உள்ள சில சில விஷயங்கள் தான். அதனை நாம் மாற்றிக் கொண்டால் பணம் அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளது. பணம் குறைவதற்கான காரணங்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும் அதற்கு முதலில் வ

By ·

ஒரு சிலர் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற உரிய பலன்கள் கிடைக்காது அதற்கு காரணம் வீட்டில் உள்ள சில சில விஷயங்கள் தான். அதனை நாம் மாற்றிக் கொண்டால் பணம் அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளது. பணம் குறைவதற்கான காரணங்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும் அதற்கு முதலில் வீட்டை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதவில் பார்க்கலாம்.

குபேரர் சிலை

பணம் வைக்கும் அலமாரியில் அல்லது பீரோவில் குபேரர் சிலையை வைத்தால் பணவரவு தடையில்லாமல் நமக்கு கிடைக்கும். குபேரர் இருக்கக்கூடிய இடம் வடக்கு திசை என்பதால் குபேரன் சிலையை வடக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும் அது வீட்டில் பண வரவை உண்டாக்கும்.

கஜலட்சுமி படம்

பணம் வைக்கக் கூடிய பீரோ அல்லது அலமாரியில் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களை சேர்த்து வைப்போம். அப்படி வைக்கும்போது அந்த லாக்கருக்குள் கண்ணாடியை வைக்க வேண்டும். அந்த இடத்தில் கஜலட்சுமி படம் ஒன்றை வைக்க வேண்டும் மேலும் அந்த லாக்கருக்குள் பணத்தை ஈர்க்கக்கூடிய பச்சை கற்பூரம் கிராம்பு ஏலக்காய் போன்ற வாசனை நிறைந்த பொருட்களையும் வைக்க வேண்டும். உங்களுடைய பணம் இப்படி கஜலட்சுமி படத்திற்கு அருகிலும் பணத்தை ஈர்க்கக்கூடிய சில பொருட்களுக்கு அருகிலும் இருந்தால் வீட்டில் பண வரவு இருந்து கொண்டே இருக்கும்.

பணம் வைக்கும் இடத்தில் தேவையில்லாத பொருட்கள்

பணம் வைக்கக்கூடிய அலமாரியின் உள்ளே தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். அப்படி தேவையில்லாத பொருட்கள் இருக்கும் பட்சத்தில் பூச்சி தூசு என அனைத்தும் சேரும் அப்படி சேராமல் இருப்பதற்கும் உள்ளே ரச கற்பூரத்தை போட்டு வைக்க வேண்டும். படம் வைக்கக்கூடிய இடத்தில் இரும்பு சம்பந்தமான கூர்மையான ஆயுதங்களை வைத்தால் சனி தோஷம் ஏற்படும். அது பணம் சேரவிடாமல் தடுக்கும் எனவே இந்த பொருட்கள் எல்லாம் உள்ளே இருந்தால் அப்புறப்படுத்தி விடுங்கள்.

சிவப்பு நிறம் சார்ந்த பொருட்கள்

பணம் வைக்கக்கூடிய இடத்தில் சிவப்பு நிறம் சார்ந்த பொருட்கள் இருப்பது மிகவும் நல்லது. மேலும் கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும். மகாலட்சுமி தேவியா இருக்கு உகந்த நிறம் சிவப்பு நிறம் என்பதால் சிவப்பு நிற பொருட்கள் அல்லது சிவப்பு நிற துணிகளை பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைக்கலாம். கருப்பு நிறத்தில் உள்ள துணிகளை பொருட்களை அந்த இடத்தில் இருந்து நீக்கிவிட வேண்டும். இதுவும் கூட உங்களுடைய பணம் தடைக்கு ஒரு காரணமாக அமையும்.

கிழிந்து போன துடைப்பம்

வீட்டில் பீரோவிற்கு பின்னால் பழைய கிழிந்து போன பாய், துடைப்பம் வைப்பது அதிர்ஷ்டத்தை தடுக்கக்கூடிய ஒரு செயல். எனவே கிழிந்து போன துணிமணிகள், பாய் தேவையில்லாத துடைப்பம் போன்றவற்றை வீட்டில் வைத்திருக்கக் கூடாது அதனை குப்பையில் போட வேண்டும்.

வீண் செலவுகள்

தேவையில்லாமல் பணம் வீண் விரயம் ஆகக்கூடிய மருத்துவ சீட்டுகள் போன்றவற்றை பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைக்க கூடாது. வீட்டில் எப்பொழுதும் கழிவறை, பாத்ரூம் போன்றவற்றின் கதவுகளை மூடி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது கழிவறை பாத்ரூம் எல்லாம் வீட்டிற்குள்ளேயே இருக்கிறது. முதலில் எல்லாம் வீட்டிற்கு வெளியில் தான் இருக்கும். ஆனால் இப்பொழுது தான் இந்த மாடர்ன் உலகில் வீட்டிற்கு உள்ளே உள்ளது. இவற்றை திறந்த நிலையில் வைத்திருந்தால் வீட்டில் பணம் வீணாக செலவு செய்யும் என்பது வாஸ்து சாஸ்திரப்படி ஆன கூற்று.

வீட்டின் பின்னால் ஒற்றை மரம்

வீட்டிற்கு பின்னால் ஒற்றை மரம் வைத்திருப்பது நல்லது கிடையாது. அது வீட்டில் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தும் பணத்த தடையை ஏற்படுத்தும் வருமானத்தை குறைய செய்யும். மரம் வளர்த்தால் நிறைய மரங்களை இடைவெளி விட்டு வளர்க்க வேண்டும். ஒரே ஒரு ஒற்றை மரத்தை மட்டும் வளர்க்கக்கூடாது.

இதனையும் படியுங்கள் : வருமானம் அதிகரிக்க சம்பள பணம் வந்தவுடன் செய்ய வேண்டியவை

Recipes AMP · Quick view
View full