வீட்டில் தரித்திரம் பிடிக்காமல் பீடை விலக பின்பற்ற வேண்டிய ஐந்து விஷயங்கள்!!

நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நாம் தீர்ப்பதற்கு பலவகையான ஆன்மீக ரீதியான வழிமுறைகளை பின்பற்றி வருவோம். நிறைய வழிமுறைகள் இருந்தாலும் நமக்கு பிடித்தமான நம்மால் செய்ய முடிந்த வழிபாட்டு முறைகளையே நாம் செய்ய முடியும் ஆனால் தினந்தோறும் அனைவராலும் பின்பற்றக்கூடிய ஒரு சில விஷய

By Prem Kumar · 17/9/2024

நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நாம் தீர்ப்பதற்கு பலவகையான ஆன்மீக ரீதியான வழிமுறைகளை பின்பற்றி வருவோம். நிறைய வழிமுறைகள் இருந்தாலும் நமக்கு பிடித்தமான நம்மால் செய்ய முடிந்த வழிபாட்டு முறைகளையே நாம் செய்ய முடியும் ஆனால் தினந்தோறும் அனைவராலும் பின்பற்றக்கூடிய ஒரு சில விஷயங்கள் இருக்கிறது அதற்கு நாம் வீட்டில் ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் தரித்திரம் பிடித்த வீடு கூட கோவிலாக மாறிவிடும். அதற்கு நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

விளக்கு ஏற்றுவது

வீட்டில் காலை மாலை என இரு வேலைகளிலும் பெண்கள் குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். காலை நேரத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது அதிகாலை ஐந்து மணிக்கு தீபம் ஏற்றினால் வீட்டிற்கு மகாலட்சுமி தேவியார் வருவார். ஒரே ஒரு தீபம் ஏற்றினால் போதுமானது.

பசும்பால் அபிஷேகம்

வாரந்தோறும் வெள்ளி கிழமையில் பெருமாள் கோவிலுக்கு பசும்பால் வாங்கி கொடுத்து அதில் அபிஷேகம் செய்தால் மிகவும் நல்லது. உங்களால் எவ்வளவு பால் வாங்கி கொடுக்க முடியுமோ, அவ்வளவு கொடுத்தால் மட்டுமே போதுமானது பெருமாள் கோவிலில் உள்ள பெருமாளுக்கும் அம்பாளுக்கும் வாங்கி கொடுக்க வேண்டும் உங்கள் கையால் பால் வாங்கி அதனை கொண்டு போய் அபிஷேகம் செய்யும்போது கோவில் குருக்கள் இடம் கொடுக்கலாம் பணமாக கொடுக்காமல் பசும்பால் வாங்கி கொடுத்தால் மிகவும் சிறப்பானது.

வீட்டை சுத்தமாக வைப்பது

வீட்டை எப்பொழுதுமே நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் வீட்டிற்கு மகாலட்சுமி தேவியார் வருவார். அசுத்தமாக இருக்கின்ற வீட்டிற்கு மகாலட்சுமி தேவியார் நிச்சயமாக வர மாட்டார். வீட்டில் இருக்கக்கூடிய குளியலறை சமையலறை வீட்டு வாசல் படுக்கையறை என அனைத்தையுமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் வீட்டில் எப்பொழுதுமே அழகு துணை கெட்டுப்போன உணவு பொருட்கள் கொசுக்கள் இரும்புகள் இவைகள் இருந்தால் நிச்சயமாக உங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி தேவியார் வரவே மாட்டார் எனவே வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சாம்பிராணி வாசம்

வீட்டில் தினமும் சாம்பிராணி ஏற்ற வேண்டும் சாம்பிராணி வாசம் வீட்டில் நிறைந்து இருந்தால் வீட்டில் தரித்திரம் பிடிக்காது. உங்களுக்கு எந்த சாம்பிராணி கிடைக்கின்றதோ அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் நெருப்பு மூட்டி பயன்படுத்துகின்ற சாம்பிராணி தான் போட வேண்டும் என்று அவசியம் கிடையாது. எந்த சாம்பிராணியாக இருந்தாலும் வீட்டில் போட்டு வீட்டை எப்பொழுதும் வாசனையாக வைத்துக் கொள்ளலாம் அந்த வாசனைக்கு மகாலட்சுமி தேவியார் எங்கிருந்தாலும் ஓடோடி வந்து விடுவார்.

விநாயகர் வழிபாடு

வாரந்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் விநாயகரை வழிபாடு செய்யலாம் விநாயகர் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மனதார விநாயகரை வழிபாடு செய்து வந்தால் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் ஒரு வெள்ளெருக்கு விநாயகரை வீட்டிற்கு வாங்கி வைத்து விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது. ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக அனைவரது வீட்டிலும் அசைவம் இருக்கும் ஆனால் விநாயகரை வழிபாடு செய்யும்போது அசைவம் சாப்பிடக்கூடாது

இதனையும் படியுங்கள் : வீடு முழுக்க லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டுமா ?

Recipes AMP · Quick view
View full