முருகனுக்கு உகந்த திருப்பாகம் ரெசிபி செய்து உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே கொடுங்க!

திருப்பாகம் திருநெல்வேலி மாவட்டத்தில் ரொம்பவே பிரபலமான ஒரு ஸ்வீட் ரெசிபி அப்படின்னு சொல்லலாம். இதே சாப்பிடுறதுக்கு அல்வா மாதிரியும் மைசூர் பாக் மாதிரியும் டேஸ்ட் அருமையாக இருக்கும். இந்த திருப்பாகம் முருகனுக்கு உகந்த பிரசாதமா சஷ்டி விரத சமயத்துல நெய்வேத்தியமா படைக்கப்படுது. நம்ம

By Prem Kumar · 1/12/2024

திருப்பாகம் திருநெல்வேலி மாவட்டத்தில் ரொம்பவே பிரபலமான ஒரு ஸ்வீட் ரெசிபி அப்படின்னு சொல்லலாம். இதே சாப்பிடுறதுக்கு அல்வா மாதிரியும் மைசூர் பாக் மாதிரியும் டேஸ்ட் அருமையாக இருக்கும். இந்த திருப்பாகம் முருகனுக்கு உகந்த பிரசாதமா சஷ்டி விரத சமயத்துல நெய்வேத்தியமா படைக்கப்படுது. நம்ம வீட்ல எப்பவுமே ஒரே மாதிரி ஸ்வீட்ஸ் வந்து சாப்பிடாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமான ஸ்வீட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. பொதுவா ஸ்வீட் அப்படினாலே கேசரி பாயாசம் அல்வா இதுதான் செய்வோம் ஆனா கொஞ்சம் வித்தியாசமா கடலை மாவு வச்சு செய்யக்கூடிய இந்த திருப்பாகம் ரெசிபி ஒரு தடவ வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

வீட்டில் வரக்கூடிய விசேஷ நாட்கள் பிறந்தநாள் திருமணநாள் போன்ற சின்ன சின்ன விசேஷங்களுக்கும் வீட்ல நடக்கக்கூடிய பெரிய விசேஷங்களுக்கும் எல்லாத்துக்கும் இந்த ஸ்வீட் செஞ்சு அசத்தலாம். வீட்ல இருக்கக்கூடிய எல்லாருமே கண்டிப்பா இத விரும்பி சாப்பிடுவாங்க. தீபாவளி சமயத்திலும் கூட வீட்ல இதை செஞ்சு என்ஜாய் பண்ணலாம். குழந்தைகளுக்கு ஸ்கூல் விட்டு வரும்போது என்ன ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுக்கிறதுன்னு யோசிச்சீங்கன்னா இந்த சிம்பிளான பாரம்பரியமான திருப்பாகம் ரெசிபி செஞ்சு கொடுங்க. சாப்டுட்டு சமத்தா படிப்பாங்க.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு கொடுக்கறதுக்கு கேசரி கிளற அதே நேரத்துல இந்த திருப்பாகம் ரெசிபியும் செஞ்சிடலாம். அதனால ஒரு தடவை கேசரிக்கு பதிலா இந்த மாதிரி ஏதாவது செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க. முருகருக்கு உகந்த நாட்கள்ல வீட்ல நெய்வேதியமா இந்த ரெசிபியை செஞ்சு படைச்சு மனதார சாமி கும்பிடுங்க. இவ்வளவு பாரம்பரியமான இந்த திருப்பாகம் ரெசிபி செய்வதற்கு நமக்கு பால் முந்திரி பருப்பு கடலை மாவு சர்க்கரை நெய் இதுதான் தேவைப்படும் பெருசா இருக்கு நிறைய பொருட்கள் சேர்க்கணும் அப்படின்ற அவசியமே கிடையாது. கம்மியான பொருட்கள் சேர்த்தாலும் டேஸ்ட்ல அடிச்சுக்கவே முடியாது அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி. இப்ப வாங்க இந்த சுவையான ரெசிபியை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : பாரம்பரியமான அக்காரவடிசல் இப்படி ஒரு தடவ செஞ்சு அசத்துங்க!

Recipes AMP · Quick view
View full