கடன் தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு!!

சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய சங்கடங்கள் தீர்ந்துவிடும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சங்கடகர சதுர்த்தி வந்தால் விரதம் இருந்து விநாயக பெருமானை வழிபாடு செய்தால் கடன் பிரச்சினைகள் தீர்வதற்குரிய அனைத்து வழிகளும் நமக்கு கிடைக்கும். விநா

By Prem Kumar · 2/3/2025

சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய சங்கடங்கள் தீர்ந்துவிடும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சங்கடகர சதுர்த்தி வந்தால் விரதம் இருந்து விநாயக பெருமானை வழிபாடு செய்தால் கடன் பிரச்சினைகள் தீர்வதற்குரிய அனைத்து வழிகளும் நமக்கு கிடைக்கும். விநாயக பெருமான் நமக்கு காட்டுவார். அப்படிப்பட்ட வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தோரண கணபதி

விநாயகப் பெருமான் பல வடிவங்களில் பல இடங்களில் காட்சி தருவார். கடன் பிரச்சினை தீர்வதற்கு நாம் தோரண கணபதி தான் வழிபட வேண்டும். தோரண கணபதி இருக்கக்கூடிய கோவில்களை நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும் இது அரிதாக இருந்தாலும் நிச்சயமாக எங்காவது தோரண கணபதி இருப்பார். அப்படியும் இல்லை என்றால் வீட்டிலேயே தோரண கணபதியை நினைத்து வழிபாடு செய்யலாம். வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி என்று மாலை நேரம் அல்லது பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்வது நல்லது.

வழிபாடு செய்யும் முறை

இது வழிபாட்டை செய்வதற்கு மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து “ஓம் தோரண கணபதி ஆவாகயாமி” என்ற மந்திரத்தை மூன்று முறை கூறி மஞ்சள் பிள்ளையாருக்கு மலர்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு செம்பருத்தி பூ அல்லது செம்பருத்தி இலை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய மலர்களை 108 முறை என்ற எண்ணிக்கையில் எடுத்து தோரண கணபதிக்கு முன்பாக ஆறு நெய் தீபங்களை ஏற்றி மலர்களால் “ஓம் தோரண கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை நூற்றி எட்டு முறை கூறி மனுதார வழிபாடு செய்ய வேண்டும். மலர்கள் இல்லாத பட்சத்தில் பச்சரிசியில் நெய் விட்டு குங்குமத்தை போட்டு கலந்து அட்சதியாக தயார் செய்து அதனை தோரண கணபதியின் மேல் போட்டு அபிஷேகம் செய்யலாம்.

விநாயகருக்கு நெய்வேத்தியம்

விநாயகப் பெருமானுக்கு நெய்வேதியமாக அச்சுவெல்லத்தை வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி இந்த வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஆரணி ஞாயிற்றுக்கிழமை இந்த முறையில் தோரண கணபதியை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். கடன் பிரச்சனை தீர்வதற்காக எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் ஞாயிற்றுக்கிழமை அன்று வரக்கூடிய சங்கடகர சதுர்த்தி அன்று தோரண கணபதியை வீட்டிலேயே வழிபாடு செய்தால் நிச்சயமாக கடன் பிரச்சனை தீரும்.

இதனையும் படியுங்கள் : கடன் தீர செய்ய வேண்டிய கல் உப்பு பரிகாரம்!!

Recipes AMP · Quick view
View full